கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 28, 2013

பொதுகூட்டமாக மாறியது புரஜெக்ட்டர் நிகழ்ச்சி!

           27.1.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சென்னை மண்ணடியில் "இஸ்லாமிய சட்டமே தீர்வு" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் ஆன்லைன் பிஜே தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரகணக்கான மக்கள் நேரடியாகவும் இணையதளம் மூலமாக வீடுகளிலும், பொது இடங்களிலும் தமிழகம் முழுவதும் கண்டனர்  , இதனை காண  கடையநல்லூர் பொதுமக்கள் மற்றும் த த ஜ சகோதர்கள் ஆவலுடன் தாங்களும் காணவேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம்  வைத்தனர். இதனால்



டவுண் கிளை சார்பாக த த ஜமாஅத் பேட்டை கிளையில் உள்ள புரஜெக்ட்டர் மூலமாக வெண் திரையில் நேரடி ஒளிபரப்ப செய்ய டவுண் கிளை மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது.

         ஆனால் அதிகமான மக்கள் இதனை காண வந்ததால் மர்க்கஸின் இடம் போதாது என்பதால் மர்க்கஸ் எதிரில் உள்ள திடலில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யபட்டிறிந்தது. சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிலும் மற்ற அமைப்புகளை சார்ந்த  சகோதர்களும்  கலந்து கொண்டு கண்டனர், இது ஒரு பொதுகூட்டம் போன்று இருந்தது, மேலும் சகோ பி ஜே அவர்களின் விஸ்பரூபம் திரைப்படம் பற்றி பேசிய கருத்து மிக சிறப்பாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.





           இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை டவுண் கிளை தொண்டர் அணியினர் சகோ அப்துல் ரஹ்மான், சகோ பிலால், சகோ அசார், சகோ தங்கள், சகோ முஹம்மத் அலி, சகோ அப்துல் காதர் மற்றும் குத்தூஸ் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் கிளை நிர்வாகிகள் எல்லா ஒத்துழைப்பும் வழங்கினர்.

           இதே ஆன்லைன்  நிகழ்ச்சி ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக மஸ்ஜித் மரியம் பள்ளியில் லேப்டாப் மூலமாக ஒளிபரப்பட்டது


இப்பொதுகூட்டதின் பதிவு செய்யப்பட்ட வீடியோவை காண கீழ் காணும் லிங்கில் பார்க்கவும்
www.onlinepj.com 

No comments: