கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 16, 2013

அனைத்து கிளை ஆலோசனை கூட்டம்!


         தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை ஆலோசனை கூட்டம் 13.01.2012 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு டவுண் கிளை தலைவர் சகோதரர் அயூப் தலைமையில் மற்ற கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு  நடைபெற்றது.
இதில் அல்லாஹ்வுக்கு இணைவைக்க கூடிய நச்சு கருத்துகள் நிறைந்த மவ்லீது என்னும் பாடலை நன்மை என்று நம்பி பாடி கொண்டு இருக்கும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஆலிம் என்ற போர்வையில் அல்லாஹ்வுக்கு எதிராக போர் செய்து வரும் கூட்டத்தார்களுக்கு எதிராக இந்த மாதம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்கள் வாயிலாகவும் துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்த அதற்கான திட்டங்கள் குறித்தும்,

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24.01.2013 வியாழக்கிழமை அன்று சகோதரர் அப்துல் ரஹ்மான் பிர்தொளஸி அவர்களை வைத்து டவுண் கிளை சார்பாக மவ்லீதுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் இதற்காக அனைத்து கிளைகளும் ஒத்துழைப்பு நல்குவது என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments: