தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 14.02.2013 அன்று மாற்றுமத சகோதரருக்கு அழைப்பு பணி செய்யவேண்டும் என்ற நோக்கில் கிளைத் தலைவர் சகோ.அல் அமீன் மற்றும் துணைத்தலைவர் சகோ.செய்யது மசூது ஆகியோர்
கடையநல்லூரில் நீண்டகாலமாக மருத்துவ துறையில் பணியாற்றி வரும் டாக்டர். மூர்த்தி (சித்ரா கிளினிக்)அவர்களுக்கு இஸ்லாம் பற்றி சிறிய அறிமுகம் செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மேலும் கண்தானம் பற்றி முஸ்லிம்களிடம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment