கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 14, 2013

நோட்டிஸ் விநியோகம்: காதலர் தினமா? கற்புக்கு கொள்ளையர் தினமா ?

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்துக் கிளையும் ஒறுங்கிணைந்து பல மார்க்கப் பணிகளும், சமுதாயப் பணிகள் மிகவும் சிறப்புடன் செய்து கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். அதன் தொடர்ச்சியாக  பிப்ரவரி 14ஆம் தேதி அன்று நடக்க இருக்கிற வழிகேடர்களின் செயல்பாடான காதலர் தினத்தைப் பற்றிய அனைத்து சமுதாய மக்களுக்கும்,  குறிப்பாக வாலிப பருவத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு அந்த தினத்தால் ஏற்பட இருக்கும் கேடுகெட்ட செயல்களை விளக்க வேண்டும் என்ற நோக்கில்.



     13.02.2013 அன்று கடையநல்லூரின் பேருந்து நிலையங்களில் த த ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் மாணவர் அணியை சார்ந்த சகோதர்கள்   காதலர்தினமா? கற்புக்கொள்ளையர் தினமா? என்ற தலைப்பில்  பள்ளி மற்றும்  கல்லுரி செல்லும்  மாணவ, மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பெரியவர்கள், பேருந்து பயணிகள் ஆகியோருகளுக்கும் 4000 நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது.



         இதனை அனைத்து சமுதாய மக்களும், வெகுவாக பாராட்டினார்கள். ஆர்வமுடன் சிலர் கேட்டு வாங்கி படித்து பாதுகாத்தும் வைத்தார்கள். பேருந்து நிலையத்தில் நின்ற ஒரு மாற்றுமத சகோதரர் ஒருவர் இந்த நோட்டீஸ் மிகவும்  அவசியமானது  ஆகையால் இந்த நோட்டீயை எங்க சமுதாய மக்களுக்கும் அனுப்புகிறேன் என்று கூறுவதை கேட்க்க முடிந்தது.

மேலும் நெல்லை மாவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட "காதலிப்போர் கவனத்திற்கு" என்ற தலைப்பிலான நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

காதலர்தினமா? கற்புக்கொள்ளையர் தினமா?  கட்டுரையை படிக்க கீழ் காணும்  லிங்கை அழுத்தவும்
http://www.kadayanallurtntj.blogspot.com/2013/02/14.html

No comments: