கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 11, 2013

தேசிய நெடுச்சலை துறையை கண்டித்து தட்டிபோர்ட்!


கடையநல்லூரில் மிகநீண்ட நாட்களாக நகராட்சி அலுவலகம் முன்பு அதாவது திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சலையில் அபாயகரமான குழி மிகநீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்திற்கும், சில நேரங்களில்


வாகனங்கள் அந்த குழியில் விழுந்து விபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நெடுஞ்சாலையை வழியாக அமைச்சர்கள், M.L.A கள்,
அரசியல்வாதிகள், துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் சென்று வந்தாலும் இந்த மரண குழியை யாரும் கண்டு கொள்ளது உள்ளனர். இந்த அவல நிலையை கண்டு பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக நெடுஞ்சாலை துறையின் கவனம் ஈர்க்கும் வகையில் முதல் கட்டமாக எச்சரிக்கை வாசகங்கள் கூடிய தட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பும் சரி செய்யப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தட்டிபோர்ட் வாசகங்கள்!
மரண குழி இங்கேநெடுச் சாலை துறை எங்கே
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே என் அருகில் வாருங்கள்! 
உங்களை நான் சாகடிக்க காத்துக் கொண்டு இருக்கிறேன்! 
என் அருகில் வாரீர்வாரீர்!! வாரீர்!!! 
இந்த ஊரின் மரண குழியான என்னை கேட்பதற்க்கு யாரும் இல்லையேஹி!ஹி!!ஹி!!!

No comments: