கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 11, 2013

TNTJ யின் தட்டிபோர்டும்: நெடுஞ்சாலை துறையின் துரித நடவடிக்கையும்!


கடையநல்லூர் நகராட்சி எதிரில் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான மரண குழி பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருந்தது, மேலும் இது சம்பந்தப்பட்ட துறையும் கண்டு கொள்ளாமல் இருந்தது, ஆகையால் இன்று 11.02.2013 காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை விடுத்து தட்டி போர்ட் வைக்கப்பட்டது.

இதை அறிந்த தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு உடனடியாக மரணக் குழியை சரிசெய்கின்றோம் தட்டி போர்டுயை அகற்றுங்கள் என்று கூறியதன் அடிப்படையில், கிளை நிர்வாகிகள் ஆலோசனையின் பெயரில் தட்டி போர்ட் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலைதுறையும் மதியம் 2.30 மணியளவில் தங்களுடைய பணியை  தொடங்கி விட்டது. இதை கண்ட வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சமுதாய பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!.



வேலையின் காரணமாக போக்குவரத்து தடங்கல் காட்சிகள் 

No comments: