கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 11, 2013

இரத்த தானம் செய்த த த ஜமாஅத் சகோதர்கள்!

கடையநல்லூர் அரசு மருத்துவமனை சார்பாக இரத்த தானம் முகாம்  11-2-13 அன்று காலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள த த ஜமாத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதில்



TNTJ வை சார்ந்த  ஒரு சில சகோதர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
       ஏன் எனில், இந்த முகாமில்  பெறப்படும் இரத்தம் இரத்த வங்கி(BLOOD BANK)யில் சேமித்து வைக்கப்படுவதாலும், மேலும் நமது மாவட்டத்தில் அதிகமான அளவு டெங்கு போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகமான அளவு உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கடையநல்லூர் TNTJ வின் கிளைகளின் நிர்வாகத்தை  தொடர்பு கொண்டு அவசர இரத்த உதவி கேட்பதால் இதில் அதிகமான ஜமாஅத்  சகோதர்கள் இரத்த தானம் வழங்கி வருவதாலும், மேலும் இதுபோன்ற அவசர உதவிகளுக்கு ஜமாஅத் சகோதர்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கருதி  ஒரு சில சகோதர்களை மட்டும் கலந்து கொள்ள செய்தனர்.    



அவசர உதவிக்கு இரத்த தேவைப்படுவோர் கடையநல்லூர் த த ஜமாஅத் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.  

No comments: