2013-2014 ஆம் ஆண்டிற்க்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் 28-2-13 அன்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்தார். இதில் வெளிநாட்டில் வசிப்போர் விமானநிலையத்தில் எந்த வித வரியும்(customs tax) செலுத்தாமல் தாங்கள் கொண்டு வரும் தங்கத்தின்
அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி ஆண்களுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள தங்கமும், பெண்களுக்கு 1,00,000 ரூபாய் மதிப்புள்ள தங்கமும் கொண்டுவர அனுமதிக்கபட்டுள்ளது.
முன்பு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அணிந்து அல்லது தனியாக நகைகள் கொண்டுவர, இந்திய சுங்க மற்றும் மத்திய கலால் விதிகள் 1967 சட்டத்தின் படி ஒரு பெண் அதிகபட்சம் 20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கமும், ஒரு ஆண் அதிகபட்சம் 10,000 ரூபாய் மதிப்புள்ள தங்கமும் கொண்டு வரமுடியும் என்ற விதிமுறைகள் இருந்து வந்தன. இந்த சட்டத்தால் அதிகமானவர்கள் விமானநிலையத்தில் தங்கள் கொண்டுவரும் தங்கத்தின் மதிப்பை விட அதிகமான அளவு வரி செலுத்தும் நிலைக்கு ஆளானார்கள்.
சில நேரங்களில் விமானநிலையத்தில் கண்டு கொள்ளாத நிலையம், சில நேரங்களில் இந்த விதியை கடுமையாக அமுல்படுத்தும் நிலையம் இருந்து வந்தது. குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்த விதி தென்இந்திய மாநிலங்களின் விமானநிலையத்தில் கடுமையாக பின்பற்றப்பட்டது. குறிப்பாக தென்இந்திய மாநிலத்தை சாந்தவர்கள் வளைகுட போன்ற நாடுகளில் அதிகம் வசிப்போராக உள்ளனர்.
இதனால் 2010 ஆம் ஆண்டு 32% இருந்த தங்கம் இருக்குமதி 2012ஆம் ஆண்டு 25% குறைந்தது ஏன் எனில் கடந்த ஆண்டு அதிகமான விமான நிலையங்களில் இச்சட்டம் கடுமையாக கடைபிடிக்கபட்டது. மேலும் 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் தங்கம் இறக்குமதி 1006.3 டன் என்றும் 2012 ஆம் ஆண்டு 650 to 700 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்று உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரம் கூறுகிறது.
இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக பலமுறை மத்திய அரசுக்கு இந்த சட்ட விதியில் மாற்றம் கொண்டுவர கோரி கடிதங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக கோரிக்கைகள் வைக்கபட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் இந்த விதியில் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.
இருந்தாலும் தற்போது புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறை அளவின் படி இன்றைய இந்தியாவின் ரூபாய் மதிப்புக்கு ஒரு ஆண் அதிகபட்சம் 20 கிராம் தங்கமும், ஒரு பெண் அதிகபட்சம் 40 கிராம் தங்கமும் கொண்டு வர முடியும்.
எனவே மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பும் வெளிநாடு வாழ் குறிப்பாக வளைகுடா வாழ் இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை தான் வழங்கி உள்ளது.

No comments:
Post a Comment