கடையநல்லூர் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களை அலைக்கழிக்கும் காவல்துறைக்கு எதிராக தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புகார்.
அந்த கடிதத்தில் குறிப்பிடபட்ட விவரம் வருமாறு :
1976ம் ஆண்டிலிருந்து கடையநல்லூரின் அனைத்து சமுதாய மக்களும் வேலை வாய்ப்பு தேடி மலேசியா, சிங்கப்பூர், போன்ற கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகள் எனப்படும் துபாய், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார் மற்றும் அமீரக நாடுகள் செல்வதற்காக பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு} பெற்று செல்ல தொடங்கினார்கள். தொழில் நுட்பப்பணியாளர்களாகவும், கொத்தனர்களாகவும், சாதாரண லேபர்களாகவும் கடையநல்லூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மேற் சொன்ன நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து தாய் நாட்டிற்கு அனுப்பும் பணம் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இருப்பதோடு அவர்களின் குழந்தைகளின் கல்வி முன்னேற்றச் செலவுக்கும் பயன்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் சம்பத்தியம் அன்னியச் செலவாணியாக இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. குடிமக்களின் தேவையை கருத்தில் கொண்டு
இந்திய அரசு வெளிவிவகாரத்துறையின் பாஸ்போர்ட் பிரிவு விண்ணப்பிக்கும் அணைவருக்கும் துரிதமாக பாஸ்போர்ட் வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை உடனடியாக புதுப்பித்து வழங்கவும், நாடு நெடுகிலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் அல்லாமல் பாஸ்போர்ட் சேவை மையங்களையும் நிறுவி (Passport Seva Kendra ) பாஸ்போர்ட் சம்பந்தமான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்திய அரசு வெளிவிவகாரத்துறையின் பாஸ்போர்ட் பிரிவு விண்ணப்பிக்கும் அணைவருக்கும் துரிதமாக பாஸ்போர்ட் வழங்கவும், ஏற்கனவே வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளை உடனடியாக புதுப்பித்து வழங்கவும், நாடு நெடுகிலும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் அல்லாமல் பாஸ்போர்ட் சேவை மையங்களையும் நிறுவி (Passport Seva Kendra ) பாஸ்போர்ட் சம்பந்தமான சேவைகளை வழங்கி வருகிறது.
ஆனால் பாஸ்போர்டுக்கான விண்ணப்பங்களில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வரும் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் பாஸ்போர்ட் விதிகளுக்கு முரணாக விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு விண்ணப்பதாரர்களிடம்மிருந்து லஞ்டமாக ரூ300 முதல் 5000 வரை பெறும் நோக்கில் செயல்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லாத அலைச்சலையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
புதிய பாஸ்போர்ட்
புதியபாஸ்போர்ட்க்காக விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் விண்ணப்பத்தோடு அவர்களின் முகவரி மற்றும் வயதுக்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
முகவரிக்கான ஆதாரங்கள
1. குடும்ப அட்டை
2. வாக்காளர் அடையாள அட்டை
3. விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள வங்கி கணக்கு புத்தகம்
4. விண்ணப்பதாரரின் ஓட்டுனர் உரிமம்
5. விண்ணப்பதாரர் பெண்ணாக இருந்தால் கணவரின் பாஸ்போர்ட்
6. விண்ணப்பதாரர் ஆணாக இருந்தால் மணைவியின் பாஸ்போர்ட்
இந்த ஆறு ஆவணங்களில் குடும்ப அட்டையோடு மீதுமுள்ள 5 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
வயதுக்கான ஆதாரங்கள்
1. பிறப்புச் சான்று (26.01.1989க்கு பிறகு பிறந்திருந்தால்)
2. கல்வி சான்றிதல் ( Record Sheet, 10th, 12th Mark Statement & TC )
3. பிரமாண வாக்கு மூலப்பத்திரம் ( Sown Affidavit நோட்டரி முன் கையெழுத்திடப்பட்டது)
விண்ணப்பதாரர் படிப்பறிவில்லாதவராகவோ அல்லது ஜந்தாம் வகுப்பிற்கு கீழ் படித்தவராக இருந்து சான்று இல்லாமல் இருந்தால் 3வது சொல்லப்பட்ட நோட்டரி அபிடேவிட்டை வயதுக்காக விண்ணப்பத்தோடு சமர்பிக்கலாம் ( Passport Application form instruction booklet page 11 of 18, table 3 column No.2c)
பாஸ்போர்ட் புதுப்பித்தல்
பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பாஸ்போர்டை புதுப்பிக்க எந்த ஆவணங்களும் சம்ர்பிக்க தேவையில்லை. ஏனெனில் பாஸ்போர்ட்டில் விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பிறந்த ஊர், முகவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரின் முகவரி மாற்றம் இருந்தால் அதற்கான ஆவணம் மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது (Passort Application form instruction booklet Table 1 of page 6 of 18 column no: D2)
தற்போது கடையநல்லூர் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட்கான விசாரணை மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படுகிறது.
உதரணமாக புதிய பாஸ்போர்ட்க்கான விண்ணப்பத்தோடு படிப்பறிவில்லாத மற்றும் ஜந்தாம் வகுப்புக்கு கிழே படித்திருந்து சான்றிதழ் இல்லாதவர்கள் நோட்டரியிடம் தங்கள் பிறந்த தேதி, பிறந்த ஊர் குறிப்பிட்டு அபிடேவிட் (Affidavit) பெற்று விண்ணப்பத்தோடு சமர்பிக்கிறார்கள். பாஸ்போர்ட் விதிமுறையும், அவ்விதம் சமர்ப்பிக்கலாம் என அனுமதித்துள்ளது. (Passport Application form instruction booklet Tablet 3 in page No: 11 of 18 in 2C) விண்ணப்பத்தோடு மேற்சொன்ன அபிடேவிட் (Affidavit) சமர்ப்பிப்பவர்களிடம் வயதுக்கான சான்று சமர்ப்பிப்பவர்களிடம் வயதுக்கான சான்று சமர்ப்பிக்குமாறு பாஸ்போர்ட் ஆபிஸில் சொல்லப்படுவதில்லை.
ஆனால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் அவ்விதமான விண்ணப்பதாரர்களை படிப்பு சான்றுகளை பெற்று வந்தால்தான் விசாரணை அறிக்கையை அனுப்ப முடியும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களோ சான்றுகள் தங்களால் பெற முடியவில்லை என்றுதான் அந்த அபிடேவிட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அதை பாஸ்போர்ட் ஆபிசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் காவல் துறையினர் அந்த சான்று வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போது சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மிகுந்த மன உழைச்சலுக்கும், சிரமத்திற்குள்ளாகிறார்கள். அவ்விதமான விண்ணப்பதாரர்கள் பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதோடு உம்ரா, ஹஜ் போன்ற புனித பயணம் மேற்கொள்ளுவதற்கும், வெளிநாடுகளில் பணியாற்றும் தங்களின் குழந்தைகளை பார்த்து வரவும்தான் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கின்றனர்.
மேலும் புதுப்பிக்கப்படும் பாஸ்போர்ட்களுக்கான போலீஸ் விசாரணை என்பது அவர்களின் முகவரிக்கான ஆவணங்கள் மட்டும்தான் சரிபார்க்கப்படுவது. எப்போதுமே வழக்கமாக இருந்து வந்தது. ஏனெனில் அவர் வைத்திருக்கும் பாஸ்போர்டில் பிறந்த தேதி, பிறந்த ஊர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கடையநல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் புதுபிக்கப்படும் பாஸ்போர்ட் விசாரணைக்கும் பிறந்த தேதிக்கான சான்றுகளை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக விசாரணை அறிக்கை தாமதமாவதோடு விண்ணப்பதாரர்களில் விஸா வைத்திருப்பவர்கள் தங்களின் விஸா முடிவதற்கு முன்பு தாங்கள் பணியாற்றும் நாடுகளில் தங்கள் பணியில் சேரமுடியாமல் நஷ்டத்திற்கும், பணியிழப்பிற்கும் ஆளாகி அவர்களின் எதிர்காலம் மிகுந்த கேள்விக்குறியாகிப்போகிறது.
ஆதலால் தாங்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைகள் பாஸ்போர்ட் விதிமுறைக்கேற்ப துரிதமாக நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட்களை பெற்று அவர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் பாதுகாக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஆவனம் செய்யும்மாறு கேட்டு கொள்ளகொள்கிறோம்.
மேற்கண்டவாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் அவர்கள் தமிழக முதலைச்சர் அவர்களுக்கு பதிவு தபாலில் புகார் மனு அனுப்பி உள்ளார்.

No comments:
Post a Comment