கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 10, 2013

ரஹ்மானியாபுரம் கிளையில் ஆலோசனை கூட்டம்!


         தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 03.02.2013 அன்று கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் கிளை நிர்வாகிகள் மற்றும் வளைகுடா நிர்வாகிகள் முன்னிலையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.சத்தாம் உஸேன் "நமது ஜமாஅத்தின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்பு சில  ஆலோசனைகள் செய்யப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.



1. நமது கிளை சார்பில் பொதுக்கூட்டம், அரபிக் கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி, சிறுவர்-சிறுமியர் மதரஸா போட்டிகள் மற்றும் பரிசுகள் மே மாதம் 5ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.
2. இவைகளுக்கான  பொருளாதாரம் வளைகுடா மற்றும் உள்ளூரில் வசூலிப்பது.
3. அந்த கூட்டத்தில் மரியம் பள்ளிவாசலின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இரண்டாம் தளத்தில் இரும்புத் தகடாலான மேற்கூரை, சுற்றி சுவர் வைப்பதற்காக ஆகும் தொகையான ரூ.2,20,000 (இரண்டு லட்சத்தி இருபதாயிரம்)-ஐ வசூல் செய்யவும், அதுபோல் வளைகுடா கிளைகளுக்கும் இதன் விபரத்தை தெரிவித்து வளைகுடா சகோதரர்களிடமும் கேட்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.
4. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கும் சமுதாய பிரச்சனைகள்  மற்றும் அவசர கூட்டங்களுக்கும் வரக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதும் கணக்கிடப்பட்டது.
5. கிளை மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு சிறந்த ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.


இதில் மாணவர்கள் அணியும், சில ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள். தங்களது  கருத்துகளை பதிவு செய்தார்கள்.

No comments: