கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளையின் சார்பில் காயிதேமில்லத் திடலில் 22.03.2013 வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு டவுண் கிளை தலைவர் அயூப்கான் அவர்கள் தலைமை
தாங்கினார்கள். மாவட்ட துணை செயலாளார்
சுலைமான் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலப் பேச்சாளர் முஹம்மது தாஹா அவர்கள் ‘’இஸ்லாத்தில் பெண்கள் உரிமை’’ என்ற தலைப்பிலும் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் ‘’பரலேவிகளுக்கு
பதிலடி’’ என்ற
தலைப்பிலும் துவக்க உரையாற்றினார்கள் அதை தொடர்ந்து, மாநில தணிக்கைகுழு
உறுப்பினர் K.S. அப்துல்
ரஹ்மான் பிரதொளஸி அவர்கள் ‘’மீலாதும்
மவ்லீதும்’’ என்ற தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் அவர்கள் நன்றிவுரை நல்கினார்கள்.
இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கடந்த ஆட்சியில்
முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தேர்தல்
பிரச்சாரத்தின் போது அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லீம்களுக்கு 7% இட
ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்
முஸ்லீம்களுக்கு பத்து சதவீதம் தனியாக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண
காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சியும் கடந்த நாடளுமன்ற
தேர்தலில் வாக்குறுதி அளித்து இருந்தது ஆனால் இதுவரையும் எந்த அறிவிப்பும்
செய்யாமல் காலம் கடத்தி கொண்டு இருக்கும் மத்திய. மாநில அரசுகளை உடனடியாக
இட ஒதுக்கீடு வழங்க இப் பொதுக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
2, தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கையை ஏற்று கடையநல்லூர் இரயில் நிலையத்தில் பொதிகை
எக்ஸ்பிரஸ் இரயில் முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல உத்தரவு பிறப்பித்த தென்னக
ரெயில்வே மேலாளருக்கு இப்பொதுக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
3, முஸ்லீம்கள் அனைத்து சமுகத்தினருடன் சகோதரர்களாக பழகுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவா மற்றும் கிருஸ்துவ மிஷனரிகள் மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம் பரவுவது போல் இங்கும் பரவிவிடும் என்று அச்சம் கொண்டு முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளாகவும், திருக்குர்ஆனை தீவிரவாதிகள் கையேடாகவும் சித்தரித்து சினிமா படம் தயாரிப்பதை இப் பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேல்
இதுபோல் படம் எடுக்கக் கூடாது என்று எச்சரிக்கறது.
4, பத்திரிக்கை மற்றும் பிற ஊடகங்களில் முஸ்லீம்களை குண்டுவைப்பவர்களாகவும், கொடுஞ்செயல் புரிபவர்களாகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை போல் தவறான செய்திகளை வெளியிடுவதையும் குறிப்பாக தினத்தந்தியில் பத்திரிக்கை தலையங்கங்கள், கட்டுரைகள் என்று நேரடியாக முஸ்லீம்களைத் தாக்கி செய்திகள் வெளியிடுவதால் தினத்தந்தியை முஸ்லீம்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5, பாஸ்போர்டுக்கான விண்ணப்பங்களில் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வரும் கடையநல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் பாஸ்போர்ட் விதிகளுக்கு முரணாக விசாரணை என்ற பெயரில் தாமதப்படுத்தி விண்ணப்பதாரர்களிடமிருந்து லஞ்சமாக ரூ300 முதல் 5000 ரூபாய் வரை பெறும் நோக்கில் செயல்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தேவையில்லாத அலைச்சலையும், மன உலைச்சலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்
படிக்ககாதவர்களுக்கும், 5ம் வகும்பு வரை படித்தவர்களுக்கும் நோட்ரிக் பப்ளிக் வழங்கும் சான்றிதழ் மட்டுமே போதும் பாஸ்போர்ட் வழங்கலாம் என்ற விதிமுறையை மீறி பள்ளி சான்றிதழ் வேண்டும் என்று கூறி மக்களை அலக்கழிக்கும் கடையநல்லூர் காவல் துறையை இப் பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது.
6, இந்தியாவில் முஸ்லீம்களுக்கென்று தனிச்சட்டங்களை இந்த நாடு வழங்கியுள்ளது. ஒரு பெண்ணுக்கு எத்தனை வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் இஸ்லாமிய மார்க்கம் முஸ்லீம்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் பருவமடைந்த பெண் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் அனுமதி வழங்குவதை இந்திய அரசயலைப்புச் சட்டம் 251வது விதியில் முஸ்லிம்களுக்கு அங்கரீகரித்துள்ளது இந்த சட்டத்தின் அடிப்படையில் ‘’15 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் அவர் விரும்பியவரை மணமுடிக்கலாம்’’ என்ற தீரப்பை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முஸ்லீம் பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாகா விட்டால் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று தமிழகத்தில் சில இடங்களில் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். மேலும் திருமணப் பதிவு சட்டத்தின் அடிப்பபடையில் திருமணத்தைப் பதிவு செய்யும் போதும் 18 வயது பூர்த்தியாகாத முஸ்லீம் பெண்களின் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு பதிபவர்கள் மறுத்து வருகின்றனர். எனவே இந்திய அரசியல் சட்டம் முஸ்லீம்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பறிக்கும் இத்தகைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
7, . பாரத் கேஸ் நிர்வனத்தின் ஏஜெண்டான கடையநல்லூர் சாந்தி ஏஜென்ஸிஸ் புதிய கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கேஸ் சிலிண்டர் மட்டும் தராமல் அடுப்பு அல்லது குக்கர் அல்லது மிக்ஸி போன்ற பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கின்றனர். இது முற்றிலும் தவறான வியபார மோசடியாகும். இதை சம்பந்தபட்ட சாந்தி கேஸ் எஜென்ஸி உடனே கைவிட வேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்று சாந்தி கேஸ் எஜென்ஸியை இந்த பொதுக்கூட்டம் எச்சரிக்கிறது. இறுதியில்
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment