வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்தியாவில் வாழ்வோர் ஆகியோர் இந்திய விமான நிலையங்களுக்கு வரும் போது குடியேற்ற படிவம் (ARRIVAL FORM) நிரப்புவதை நிறுத்த இந்திய குடியேற்ற துறை முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டு படிப்படியாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் செப்டம்பர் 2013 க்குள் முழுமைபடுத்தப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இத்திட்டம் கடந்த சில ஆண்டாக முயற்சி செய்து தற்போது அரசின் அறிவிப்புக்காக காத்திருப்பதாக இந்திய தகவல் மையம் துணை தலைவர் கூறி உள்ளார்.
மேலும் பயணிகள் ஏறும் விமானநிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட அடுத்த 15 நிமிடத்தில் பயணிகள் இறங்கும் விமானநிலையத்திற்கு பயணிகளின் முழுவிவரமும் நவீன தொழில் நுட்பத்தில் தெரிவிக்கப்படும். இதனால் விமான நிலையங்களில் பயணிகளின் சிரமம் தவிர்க்கபடும்.
தகவல் : Siasat Daily,
No comments:
Post a Comment