தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் – ஜித்தா நிர்வாக கூட்டம் கடந்த (15-03-2013) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் இனிதே நடைபெற்றது. துவக்க உரையாக மூமினின் பண்புகள் என்ற தலைப்பில் சகோ. மைதீன் ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்கள், தொடர்ந்து..,
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. கடையநல்லூர் அனைத்து கிள்ளைகளின் நிர்வாக செலவீனங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது..! குறிப்பாக மஸ்ஜித் மர்யம் (ரஹ்மானியாபுரம்) கிளையின் நிர்வாக செலவீனங்கள் வரவுக்கு மிக அதிகமாக ஏற்படுவதாக கிளை நிர்வாகிகள் கூறியதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்க்கான தீர்வை எப்படி காண்பது ஆலோசிக்கப்பட்டது. மற்றும் கடந்த காலங்களைப் போன்று எல்லாக்கிளைகளின் நிதி நிலை அறிக்கைகளையும் முறையாக பெற்று தகுந்த முறையில் நிர்வாகம் செயல் பட அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.!
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூடிய விரைவில் நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.!
3. வளைகுடா மண்டலங்களை ஒருங்கிணைப்பது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அதற்க்கு சகோ. பாசித் அவர்களை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது.! தொடர்பு எண் - 00966551106937 abuthowhitha@yahoo.com
4. நான்கு கிளைகளின் வரவு செலவு கணக்குகளை 3 மாதத்திற்கு ஒரு முறை முறையாக கேட்டுப்பெறுவது எண முடிவு செய்யப்பட்டது..!
5. நமதூரில் கடந்த வருடம் அமீரகம் நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் மற்றும் மாற்று மத கட்டுரை போட்டி போன்று..! இந்த வருடம் அனைத்து வெளிநாட்டு கிளைகளின் சார்பில் நடத்துவது, கூடுதலாக இஸ்லாமிய பெண்களுக்கான கட்டுரை போட்டியையும் நடத்துவது சம்பந்தமாக அனைத்து மண்டலங்களையும் தொடர்புகொள்வது. மேலும் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் இது சம்பந்தமாக ஆலோசனை செய்து ஜித்தா(கடையநல்லூர்) நிர்வாகத்தை தொடர்புகொள்ளச் சொல்வது எனவும் ஆலோசனை செய்யப்பட்டது.!
துவா உடன் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment