கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 15, 2013

மக்கா நகர் கிளை: மாணவர்கள் படிக்க ஏற்பாடு

     தமிழகத்தில் தற்போது பொது தேர்வு நடப்பதால் இதற்காக மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் எப்போதும் போல் மின்சார தடை உள்ளது, இதனால் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் சிரமாமான நிலையை ஏற்படுத்துகிறது. மேலும் மக்கா நகர் பகுதியில்



 பொருளாதரத்தால் பின் தங்கிய நிலையில் உள்ள அதிகமான குடும்பங்கள் உள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு மக்கா நகர் த த ஜமாஅத் சார்பில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் பள்ளியில் 8-3-13 அன்று முதல் தேர்வு எழுத தயாராகும்  மாணவர்கள்  பள்ளியில் தங்கி படிப்பதற்கான ஏற்பாடுகளும் மின்சார தடை ஏற்பட்டால் இன்வேர்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டும் வருகிறது.

     எனவே இத்தகைய வசதிகளை  மாணவர்கள் பயன்படுத்தி தேர்வை சிறப்பாக எழுதுமாறு கிளை நிர்வாகம் மாணவர்களை கேட்டு கொள்கிறது.  

No comments: