கடையநல்லூரில் TNTJ கிளைகளால் மார்க்க பணி மட்டும் அல்லாமல் சமுதாயப்பணிகளும் செய்கிறார்கள் என்பதை அனைத்து சமுதாயத்தவரும் அறிவார்கள் என்பதற்கு சான்றாக 20.03.2013 அன்று மாலை 3 மணிக்கு இறந்த ஒரு பெரியவரின் சடலம் சுகம் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாலையோரத்தில் கிடந்ததை காவல் துறை கூட கண்டும் காணாமல் சென்றிருக்கிறார்கள்.
இறந்தவர் முஸ்லிம் என்று தெரிந்த அந்த பகுதியை சார்ந்தவர் இரவு 9 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்காநகர் கிளைக்கு தொடர்பு கொண்டு விபரம் கூறியுள்ளனர். மக்காநகர் கிளைத்தலைவர் சகோ.ஜாஹிர் உசேன் உடனே ரஹ்மானியாபுரம் கிளைத்தலைவர் சகோ. அல் அமீனை தொடர்பு கொண்டு இருவரும் மற்ற நிர்வாகிகளும் சடலம் உள்ள இடத்திற்கு வந்து இறந்தவர் முஸ்லிம் என்றும், அவர் பெயர் சுலைமான் என்றும், பல வருடமாக கடையநல்லூரில் தான் இருக்கிறார்.
மேலும் இவரின் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள ஓர் கிராமம் என்ற தகவல் சேகரித்து, இறந்தவரின் உறவினரை தொடர்பு கொண்டதில் இறந்தவரை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார்கள். காவல் துறையினர் ஏற்கனவே பார்த்துச் சென்றதால் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டதில் அனுமதி அளித்தார்கள்.
உடனே ஆம்புலன்ஸ்ஸூக்கு அழைப்பு விடுத்து இறந்தவரின் உடலை வெள்ளை துணியால் கட்டி அனுப்பி வைத்தனர். அந்த ஊருக்கு இறந்தவரின் உடலுடன் சில நிர்வாகிகளும் சென்று அவருக்கு, குளிப்பாட்டி, கபன் அணிந்து உறவினரிடம் கொடுத்து விட்டு ஊருக்கு திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

No comments:
Post a Comment