கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 9, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனை பிரச்சாரத்தில் இடையூர்

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக வாராந்திர தெருமுனை பிரச்சாரம் 06-04-2013 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு முதல் தெரு மேலவட்டரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அறிவிப்பு செய்திருந்தனர். இதனை அறிந்த மேலவாட்டாரத்தை சார்ந்த ஒருவர் இதனை தடுக்கும்



விதமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கட்டுமானத்திற்கான கற்களை கொட்டி இடையூர் செய்தார்.

      இருந்தாலும் குறிப்பிட்டபடி அதே இடத்தில் போலிஸ் அனுமதியுடன் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது. இதில் சகோ இஸ்ஹாக் அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்"என்ற தலைப்பில் உரையாற்ற துவங்கினார். நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருக்கும்போதே அதே  தெருவை சார்ந்த நான்கு நபர்கள் ( இதில் மூன்று நபர்கள் முஸ்லீம் லீக் அமைப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிட த்தக்கது) கீழ வட்டாரத்தில் இருந்து தடுக்கும் விதமாக அசிங்கமான வார்த்தைகளை கூறி கொண்டு நிகழ்ச்சி நடைபெரும் இடத்தை நோக்கி வந்தனர்.


     இவர்களை நிகழ்ச்சியை கேட்டு கொண்டு இருந்த சகோதர்கள் அவர்களை தடுத்தனர். அதற்குள்ளாக போலீசார்களும் விரைந்து வந்து அந்த நான்கு நபர்களிடம் இது அனுமதி பெற்று நடைபெறும் நிகழ்ச்சி இதனை தடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை அவர்களிடம் கூறி அந்த இடத்தை விட்டு தடுக்க வந்த அந்த நான்கு நபர்களையும் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து எந்த வித தடங்கலும் இல்லாமல் நிகழ்ச்சி ஒரு பொதுக்கூட்டம் போன்று நிறைவு பெற்றது அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

     இஸ்லாமிய மார்க்கம் பற்றிய செய்திகள் கிடைக்காமல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்  என்று அனைத்து தரப்பினரும் வீண் கேளிக்கை மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் சீரியல்களில் சீரழிந்து போகும் நமது சமுக மக்களிடம் அவர்களை தேடி சென்று மார்க்க போதனைகள் செய்யவேண்டும் என்ற பெரும் ஆவலுடன் தான் இது போன்ற தெருமுனை பிரச்சாரங்கள் கடையநல்லூரில் அதிகமான அளவில் த த ஜமாத்தால் செய்து வருகின்றது.

     ஆனால் யானை ஊர்வலம், அரசியல் ஊர்வலம், கல்யாண ஊர்வலம், என்னும் எத்தனையோ மார்க்கத்திற்கு விரோதமான காரியங்கள், ஒழுக்கக்கேடான நிகழ்வுகள் வட்டாரங்களில் நடைபெற்று வருவதை கண்டு கொள்ளாத இவர்கள், மக்களிடம் மார்க்க விழிப்புணர்வு மற்றும் இஸ்லாம் கூறும்  ஒழுக்கம் பற்றிய போதனைகள்  பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தடுக்க நினைக்கும் இவர்களை போன்ற ஒரு சிலரும் தாங்களை மாற்றி கொள்ளவேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் ஆவல்.

2 comments:

Anonymous said...

இதே தெருவில் ரகுமானிய டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் பள்ளயில் ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர்களை மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் சேர்த்து தெருவில் கூத்தடித்த பொழுது இந்த மொள்ளமாறிகள் எங்கே சென்றார்கள்??...இதே தெருவில் வாரம் ஒருமுறை தெருமுனை பிரசாரம் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

Anonymous said...

Alhamdu Lillah. plees no use mollamarikal