கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 18, 2013

ஜித்தா: ஆலோசனைக் கூட்டம் !


     03-05-2013 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு தாயகத்திலிருந்து வருகை தந்த சகோ. M.S. சுலைமான் அவர்கள் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. 

     நிகழ்ச்சியின் இறுதியில் நமது (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பின்)
 
வேண்டுகோளுக்கு இணங்க ஜித்தா மண்டல தலைவர் முன்னிலையில் சகோ. M.S. சுலைமான் அவர்களிடம் நமதூர் பேட்டை கிளை பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. 

    நமதூர் தவ்ஹீத் சகோதரர்கள் பேட்டை கிளை பிரச்சினைகள் குறித்து எழுப்பிய அநேக சந்தேகங்களுக்கு M.S. சுலைமான் அவர்கள் தகுந்த விளக்கமளித்தார்கள். அதோடு பிரச்சினைகள் எவ்வாறு சாதுர்மாக கையாளப்பட்டு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருப்பையினால் மாநில / மாவட்ட ஒத்துழைப்போடு எவ்வாறு கையாளப்பட்டது  போன்ற விசயங்களும் சகோ. M.S. சுலைமான் அவர்கள் மூலம் நமதூர் சகோதரர்கள் கேட்டு தெரிந்துகொண்டார்கள். 

இறுதியில் துவாவோடு கூட்டம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

No comments: