மேலக்கடையநல்லூர் மெயின்ரோட்டை சார்ந்த மலையாண்டி என்ற முஹம்மது அலி வயது 80. இவர் பல ஆண்டுகளாக சவுதியில் வேலை செய்த போது இஸ்லாத்தை தன்னுடைய மார்க்க வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் தாயகம் திரும்பியதும் கடையநல்லூர் பரிம்பு பகுதியில் உள்ள கூனி பள்ளிவாசலில் மோதினாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவாக இருந்த நிலையில் கடந்த 02.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை தன்னுடைய இல்லத்தில் மரணம் அடைந்தார் ( இன்னலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜீவுன்)
இவரின் குடும்பத்தார் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்வீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளை தொடர்ப்பு கொண்டு எங்களது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு தற்போது முஸ்லீம்மாகவே மரணம் அடைந்துவிட்டார்.
அவர் நான் இறந்து விட்டால் என்னை இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கவேண்டும் என்று கூறி வந்தார், எனவே அவரின் கடைசி விருப்பதிற்கிணங்க இஸ்லாமியமுறைப்படி நல்லடக்கம் செய்து தரும்மாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நிர்வாகிகளை கேட்டு கொண்டதின் அடிப்படையில் முஹம்மது அலி அவர்களின் ஜனஸா நல்லடக்கம் கூனி பள்ளி மையவாடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ( இவருடைய குடும்பத்தில் இவர் மட்டுமேஇஸ்லாத்தை ஏற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment