ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் நிர்வாக ஆலோசனை கூட்டம் ஜித்தா செனையா பாட்சி சாக்லேட் நிறுவன கேம்பில் 21-06-2013 வெள்ளி அன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டமைப்பின் பொருப்பாளர்களோடு
மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரியும் மண்டல பொருளாளர் சகோ. யூனுஸ் அவர்களும் கலந்துகொண்டு கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் வரக்கூடிய ரமழானில் கூட்டமைப்பின் பணிகள் எவ்வாறு அமையவேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்கள்,
வருகிற ரமழானில் கடையநல்லூர் அனைத்து கிளைகள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
விடுமுறையில் ஊர் சென்று திரும்பிய கூட்டமைப்பின் பொருப் பாளர் சகோ. அப்துல் பாஸித் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார், பின்னர் நோன்பு கஞ்சி வகைக்காக ஜித்தா சகோதரர்களின் சார்பில் எந்த விதத்தில் பங்களிப்பு செய்வது என்பது குறித்த ஆலோசனைசனை செய்யப்பட்டது.
கடையநல்லூர் அனைத்து கிளைகளின் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு ஜித்தா கொள்கை சகோதரர்களை அதிகமான பங்களிப்பு செய்யச்சொல்வது என இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அசத்தியவாதிகளால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்ட பேட்டை கிளைக்காக இதுவரை ஜித்தா சகோதரர்கள் சார்பில் வழங்கப்பட்ட உதவி குறித்து உறுப்பினர்களிடம் விளக்கப்பட்டது.
ரஹ்மானியா புரம்(மஸ்ஜித் மர்யம்)கிளையில் இடப்பற்றாக்குறையால் தொழுகைக்கு வரக்கூடியவர்கள் வெயிலிலும் மழையிலும் நின்று தொழுவதால் தற்ச்சமயம் பக்கத்தில் உள்ள இடத்தில் தற்க்காலிக டெண்ட் அமைப்பது என கிளை நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டு நம்மிடம் தெரிவித்திருந்தனர் அந்த வகைக்காக வழங்கப்பட்ட பொருளாதாரம் குறித்தும் சகோதரர்களிடம் விளக்கப்பட்டது.
இறுதியில் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் ஆறு மாத கால கணக்கினை கேட்டு பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் வரும் நோன்பு பெருநாளில் கூட்டமைப்பின் பொதுக்குழுவை மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த பொதுக்குழுவிற்க்கு இன்ஷா அல்லாஹ் ரியாத் சகோதரர்களையும் கலந்துகொள்ள செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.இறுதியில் துவாவுடன் ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்றது.
நோன்பு கஞ்சி வகைக்காக பணம் வசூலிப்பதற்க்கு கீழ்கண்ட சகோதரர்கள் நியமிக்கப்ப்ட்டுள்ளார்கள்:
சகோ. முஹம்மது கவுஸ் - பாப் மக்கா - 0501805861
சகோ. அப்துல் பாசித் - சரபியா - 0541960060
சகோ. அப்துல் அஸீஸ் - மக்கா - 0503661452
சகோ. அப்துல் காதர் - செகரான் / சீபோர்ட் - 0556119908
சகோ. இஸ்மாயில் / ஷாகுல் - செனையா - 0564773986
சகோ. அப்துல் ஹலீம் - பலத் - 0509419349
குறிப்பு:
கடந்த வாரம் நடப்பதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் ஜித்தா மண்டல ரத்ததான முகாம் மற்றும் பயான் நிகழ்ச்சி காரணமாக இந்த வாரம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment