கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 9, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: மரியம் பள்ளி கூரை அமைக்கும் பணி !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளைக்கு உட்பட்ட மஸ்ஜித் மரியம் பள்ளியில் கீழ் தளம் ஆண்களுக்கும், மேல் தளம் பெண்களுக்கும்



ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில்  ஜும்மா போன்ற தொழுகை நேரங்களில் பள்ளியில் அதிகமான மக்கள் வருவதால் இருதளங்களும் நிரம்பி பள்ளியின் வெளிப்பகுதியில் மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் தொழுது வருகின்றனர்.

     மேலும் ரமலான் நேரத்தில் அதிகாமான மக்கள் தொழுகைக்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்ட கிளை நிர்வாகம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான  ஒரு சகோதரரின் சொந்த இடத்தில் அவரின் அனுமதியுடன் தற்காலிக கூரை ஏற்பாடு செய்யபட்டு வருகிறது .

     இதற்கான பொருளாதாரம் முழுக்க முழுக்க நன்கொடைகள் பெற்றே செயல்படுத்துகிறது. எனவே சகோதர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது .

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.(2:110)

 தொடர்பு கொள்ள :

கிளை நிர்வாகிகள் : 00919942470256, 00919976122408, 00917200000477


மக்கள் பள்ளியின் வெளிப்பகுதியில் தொழும் கட்சி  




புதியதாக அமைக்கப்பட்டுள்ள கூரை 

No comments: