கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 7, 2013

இரத்ததான முகாம் நிகழ்ச்சி !

       கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளைகள் மற்றும் நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை &மருத்துவக்கல்லுரி சார்பாக 07-07-13



அன்று மாவட்ட செயலாளர் சகோ பைசல் தலைமையில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசர், மாவட்ட துணை தலைவர் நேசனல் சாகுல் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

    இதில் கடையநல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சண்முகையா மற்றும் மருத்தவ கல்லுரி மற்றும் மாவட்ட இரத்த வங்கி மருத்தவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த இரத்ததான முகாமில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு தாங்களின் பங்களிப்பை வழங்கினர். இதில் 102 நபர்கள் இரத்ததானம் செய்தனர், 48 நபர்கள் இரத்தவகை கண்டறியப்பட்டு இவர்களை அவசர வகைக்கு பயன்படுத்தி கொள்ளவது என்று மாவட்ட இரத்த வங்கி குழுவினர் கேட்டு கொண்டனர்.

    இதில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ்களும் இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்களுக்கு திருக்குரான் மற்றும் இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.














செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த போது



No comments: