கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 6, 2013

ரியாத்: ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்!

     ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம் ரியாத்தில்  05-07-13 அன்று  சகோ அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இதில் செய்யப்பட்ட ஆலோசனைகளின் படி கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

1) நோன்பு கஞ்சி, பித்ரா வரவுகளை நமதூரில் உள்ள கிளைகளின் தேவைக்கேற்ப பகிர்ந்து வழங்குவது.



2) நோன்பு கஞ்சி வரவு அதிகமாகும் பட்சத்தில் சுற்று வட்டாராத்தில் உள்ள கிராமங்களுக்கு பகிர்ந்து வழங்குவது,

3) ஜித்தாவில் நோன்பு பெருநாளையோட்டி நடைபெற இருக்கும் சவூதி வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்பது

4) கடையநல்லூரில் 7-7-13 அன்று நடைபெற இருக்கின்ற இரத்ததான முகாமில் கலந்து கொள்ளும் மாற்று மத சகோதர்களுக்கு திருக்குரான் அன்பளிப்பாக வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (இந்த வகைக்கு ரியாத்தில் வாழும் ஒரு சகோதரர் பொறுப்பு ஏற்று கொண்டார் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்)

5) ரஹ்மானியாபுரம் மரியம் பள்ளியின் வெளிப்புறம் அமைக்கப்பட உள்ள தற்காலிக கூரை அமைக்கும் பணிக்கு ரூபாய் 10,000 அனுப்பிவைப்பது,

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மேலும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதர்களுக்கு சகோ பிஜே அவர்கள் பேசிய நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பிலான மொத்தம் 50 குறுந்தகடுகள்(DVD) வழங்கப்பட்டு, அவர்கள் தங்கி உள்ள பகுதிகளில் உள்ள  தமிழ் பேசும் மக்களிடம் தாவா பணிக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இறுதியில் துவா உடன் நிறைவுபெற்றது.

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.



No comments: