கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 11, 2013

ஜித்தா : ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா வாழ் கடையநல்லூர் சகோதர்கள் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (08-11-13) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் AGM கேம்பில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள்:

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்வதற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட தொகையை தவணை முறையில் கூடிய விரைவில் அனுப்புவதற்கு ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் விரிவாக்கத்திற்கு தேவைப்படும் பொருளாதாரத்தை எவ்வாறு நிறைவேற்றுவது அதற்குரிய நடவடிக்கைகளை துரித முறையில் மேற்கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

3. அதோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுன் கிளை மற்றும் மர்யம் கிளைகளின் எதிர்வரும் பொருளாதார தேவைகளையும் கருத்தில் கொண்டு எவ்வாறு நமது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற விசயங்களும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

4. பேட்டை கிளையின் வேண்டுகொள்ளின்  படி நமதூர் பேட்டை பகுதி நபர் ஒருவர் வெகு நாட்களாக குடும்பத்தினரோடு தொடர்பு இல்லாமல் சவுதியில் இருந்து வருகிறார். அவர் குடும்பம் ஊரில் பலவாறு கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அவரை தொடர்பு கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
  
இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது.  

No comments: