பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பார்ந்த எனது இஸ்லாமிய சகோதர! சகோதரிகளே! இந்த கட்டுரையை வாசிப்பதற்கு முன்னால் சிறிது அமைதியாக ஒரு கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு போர்க்களத்தில் அணிவகுத்து நிற்கும்
போர்வீரர்களில் ஒருவராக உங்களது இடக்கரத்தில் கேடயமும், வலக்கரத்தில் ஈட்டியோ, வாளோ வைத்திருப்பது போன்றும், அப்போது எதிரிகளுக்கெதிராக உணர்ச்சியூட்டி,கிளர்ச்சியூட்டக் கூடியவார்த்தைகளைக் கூறுவாரே உங்களது தளபதி, அதுபோன்று கீழ்க்கண்ட வாக்கியங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது நாம் நம் மனம் என்னும் எண்ணப் பதிவேட்டிலிருந்து இன்னும்
உதிரம் உறையாத இரண்டு இரத்த வரலாறுகளை நினைத்துப் பார்ப்போம், அவை இன்னும் உறங்காது, ஓயாது. உளறிக்கொண்டிருக்கும் ஓலமாக முஸ்லீம்களாகிய நமது காதுகளில் விழவில்லையா? அந்த இரண்டில் முதலாவது இதோ.....
இன்றிலிருந்து 1400 ஆண்டுகளுக்கு முன்பாக அரபு நாட்டிலே
மக்கா என்ற ஊரிலே முகம்மது என்ற மனிதர் தன்னை ஒரு இறைவனின் தூதர் என்று வாதிட்டார். அவர் மக்களுக்கு ஏக இறைவன் ஒருவனே என்ற உன்னத கொள்கையை போதிக்கிறார். அதிலிருக்கும் உண்மையையும், நேர்மையையும் நேசித்து சில சொற்ப நபர்கள் அவரை ஆதரிக்கின்றனர். அப்படி ஆதரித்த அந்த மனிதர்கள் பட்ட துன்பங்கள் நாம் படிக்காத, கேட்காத புதிய பாடங்களல்ல அதில் சிலர் அங்கேயே தன் உயிர் பறிக்கப்படுகிரார்கள். பெண்களும் உட்பட எஞ்சிய சிலர் ஊரை விட்டேவிரட்டியடிக்கப் படுகிறார்கள், இவர்களைப் போன்றே இறுதியில் அந்தத் தூதரும் சொந்தங்களை, சொத்துக்களை விட்டுவிட்டு விரட்டியடிக்கப்படுகிறார். பிறகு மதீனா என்ற ஊரில் தஞ்சம் புகுந்து அவர்கள் தலையாக நினைத்த அந்தக் கொள்கையை தலை நிமிர்ந்திடச் செய்து, தங்கள் உயிரை விட மேலாக நேசித்த அந்தத் தூதரையும், இஸ்லாத்தையும் கட்டிக்காத்திட தன் நெருப்பு வார்த்தைகளினால் புடம்போட்டு வார்த்தெடுக்கப்பட்ட இரும்பு மனிதர்களை அந்த மண்ணிலே உருவாக்கி, தங்களை ஊரை விட்டே விரட்டியடித்த அந்த எதிரிகளுக்கு மத்தியிலே நிறுத்துகிறார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளுக்கு முன்னால் இந்த
முன்னூறுக்கும் குறைவான கொள்கை வீரர்களின் முனங்கல் என்ன தெரியுமா? '' இன்றைய நாள் எனது கொள்கையான இஸ்லாத்தைக் காப்பதற்காக நான் ஈடாகக் கொடுக்கவிருப்பது எனது உயிரைத் தவிர வேறொன்றுமில்லை'' என்ற வாக்கியம் தான். அந்தப் போரிலே எதிரிகளின் ஈட்டி முனைகளைத் தங்களது உடல்களினால் ஒடித்து உடைத்து முஸ்லிம்களில் சிலர் உயிர் இழக்கின்றனர். அந்த இழப்புகளின் இறுதிக்கட்டமோ அல்லாஹ் இஸ்லாத்திற்கு அவர்கள் மூலமாக
வெற்றியைக் கொடுக்கிறான்.
பிறகு அதைத் தொடர்ந்து அந்த இஸ்லாத்திற்காக பல போர்களிட்டு
முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள். இறுதியில் தார்மீக வெற்றியாக அந்தத் தூதரான மனிதர், தம் கொள்கையை படைப் பரிவாரங்களோடு தங்களை அடக்கி ஒழித்த, விரட்டியடித்த தம் சொந்த ஊரான மக்கவிற்கே திரும்புகிறார். பிறகு பூரண இஸ்லாம் அந்த அரபுலகம் அனைத்திற்கும் பறந்து இன்று உலகம் முழுவதும் தனது கொள்கையை வியாபித்திருக்கிரதே, அதற்குக் காரணம் நாம் முன்பு பார்த்த அந்த மனிதர்களின் அளவிடமுடியாத தியாகம், பூமியில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாத உள்ளம், புறக்கணிக்கப்பட முடியாத வீரம், போர்குணம்...... ஆகியவைதான் அவர்களுக்கு அல்லாஹ்விடத்திலிருந்து உதவியை வாங்கிக் கொடுத்தது, என்ற முதல் வராற்றை கண்ணீரோடு நம் நினைவில், மற்றுமொரு முறை பதியவைத்துவிட்டு, நமது அடுத்த இரத்த வரலாற்றை நோக்கி
பயணிப்போம்.
இது இந்திய இஸ்லாமியர்களுக்கென்றே உள்ள ஒரு தனிப்பெருமையான வரலாறு. இன்று இஸ்லாமியர்களாகிய நாம் இட ஒதுக்கீட்டுக்காக அரசியல்வாதிகளுக்கு இறையாகிக் கொண்டிருக்கின்றோமே அதற்குக் காரணமான வரலாறு. இந்தியாவிற்குள் பிழைப்பு தேடிவந்தவர்களால் பிளையாக்கப்பட்ட வரலாறு. ஆம் அதுதான்...... ஒரு நூற்றாண்டுகளுக்கு, முன் நடந்த இந்திய விடுதலைப் போராட்டம்.
இந்த சுதந்திரப் போராட்டத்திலே ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக, அனைத்துச் சமுதாய மக்களும் சேர்ந்து போராடினார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மையோ, அது
போன்றே மறைக்கப் பட்ட, மறுக்கமுடியாத மற்றுமொரு உண்மை முஸ்லீம்கள் தங்களது சக்திக்கும் மீறி, தங்களது சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிலேபங்காற்றினார்கள் என்பது தான். இப்படி மூர்கத்தனமான போராடும் குணங்களை வழிவழியாகப் பெற்று வந்தும், நாம் ஒரு முட்டாள்களாக நமது நாட்டிலே மூடிமூடி வைக்கப்பட்டிருகிறோமே, அதன் பின்னணி என்ன தெரியுமா? இந்திய தேசத்திற்காக போராடும் சமுதாயங்கள் வாய்வழியாக ஒரு சபதம் ஏற்கிறார்கள், ஆங்கிலேய மொழியான ஆங்கிலத்தை நாம் எவரும் கற்கக்கூடாது என்று, அதை முஸ்லீம்களைத் தவிர வேறு எந்த சமுதாயமும் கடைபிடிக்கவில்லை. கள்ளத்தனமாக கற்றுக்கொண்டு மற்றவர்கள் தங்கள் சமுதாயத்தை கரையேற்றுவதிலே தான் குறியாக இருந்தார்கள்.
அதுபோன்று ஆங்கிலேயர்களால் முஸ்லீம்களுக்கென்று தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட " கான் சாகிப் சம்சுல் உலமா " எனும் மதிப்புமிக்க பட்டங்களையும் அவர்களின் முகத்திற்கு முன்னால் கிழித்தெறிந்து "விரைவில் உங்கள் முகத்திரையையும் கிழிப்போம்" என்றார்கள்.
இப்படி எத்தனை சொல்ல.... கப்பலோட்டிய தமிழன்
என்பார்கள் கப்பல் வாங்க காசு கொடுத்தவன் ஒரு முஸ்லிம் என ஏன் கூற
மறுத்தார்கள்? தேசியக் கோடியை வணங்கினார்கள், அதை வடிவமைத்ததே ஒரு இஸ்லாமியப் பெண் என்பதை ஏன் மறைத்தார்கள்? கதர் சட்டையை காந்தி போட்டார், நாமும் போடுவோம் வெள்ளையனுக்கு எதிராக என்றார்கள், அந்த வெள்ளைத் துணிக்கு கதர் (தான் கண்ணியமானது) என்று பெயரிட்டு காந்திக்கு அணியக்கொடுத்தானே ஒரு முஸ்லிம், அவனை ஏன் வெறுத்தார்கள்? அதை அணிந்து கொண்டவன் புனிதனானான், அதை அணியக்கொடுத்தவனை மனிதனாகக் கூடப் பார்க்கவில்லையே இந்த சமுதாயம். ஆனால் நமது முன்னோர்களோ ஆங்கிலேயனுக்கு எதிராக வாள்மட்டும் வீசவில்லை வார்த்தைகளையும் தான் வீசினார்கள். ஆமாம், நமது ஜும்ஆ மேடைகளில் ஏறும் ஒவ்வோர் உலமாவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும் எனும் உரையைத்தான் முஸ்லிம்களின் உள்ளத்தில் தீப்பிழம்பாக ஊற்றினார்கள். எத்தனையோ இந்து மன்னர்களும் சேர்ந்து போராடியிருக்கும் போதும், யூனியன் ஜாக் வீழ்ந்தது என்று தெரிந்தவுடன் தங்களது வெற்றியை வெளிப்படுத்த ஜாக்கின் கொடிக்கம்பத்தில் அதற்குப்பதிலாக அனைவரும் சேர்ந்து திப்பு சுல்தான் கொடியை அல்லவா ஏற்றினார்கள்.
இப்படிப்பட்ட வரலாற்று உண்மைகளையெல்லாம் உமிழ்வதற்கு சில
பேனாக்களுக்கு வலிக்கிறது, அதை எழுத சில கைகளுக்கு கசக்கிறது. ஏன் தெரியுமா சகோதரா.....? இந்த வரலாறுகளெல்லாம் பதியப்படும் போது அந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான நமது முஸ்லீம் முன்னோர்கள் உயிரோடு இல்லை. இதையெல்லாம் பார்த்து வாழ்ந்த, வாழும் முஸ்லீம்களுக்கோ உணர்ச்சிகள் இல்லை. ஏன் இல்லை?இந்த இந்திய தேசத்திற்காக அவன் வெறுத்த கல்வி அவனை இந்தியாவிலிருந்தே வெளியேற்றும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாதபாமரனாகியிருந்தான் அப்போது. அப்படி தொடர்ந்த நம் முன்னோர்களின் நிலைஇன்று வரை மாறவில்லை. கல்வி இல்லை, அதனால் தாய் நாட்டில் வேலையில்லை பிறகென்ன, தன் வயிறு நிறம்பாவிட்டாலும், தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்காவது வாழ்ந்தாக வேண்டும் என்ற வேட்கை அவனை வெளிநாடு செல்ல
வைத்தது. இன்று வரை அவன் நிலம் மாறவில்லை! நிலை மாறவில்லை! தரம் ஏறவில்லை! கரம் தாளவில்லை!
இந்தியா சுதந்திரமடைந்து 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது, இங்கே
பிற சமுதாய மக்களோ, அரசாங்க வேலையும், தன் குடும்பத்தாரோடு அன்பு
பாசமுமாக வாழும் போது, முஸ்லிம்கள் மட்டும் முன்னேறியிருப்பது எதில்
தெரியுமா? இதற்குமுன்னால்.....
காகிதக் கடிதத்தில் மனைவிக்கு முத்தம், பிள்ளைப்பாசம், தாய்
தந்தை பரிவு, அக்கம் பக்கத்து உறவு, இதை அப்படியே இப்போதும் செல்போனிலே செய்துகொண்டிருக்கின்றானே, இந்த அவல நிலை மாறவேண்டாமா? முஸ்லிம்களிடத்தில் இது ஒன்றுதான் முன்னேற்றுமா?
அன்புச்சகோதரா! இன்று பட்டப்படிப்பு படித்து விட்டு பாஸ்போர்ட்
எடுத்துவிட்டு இன்னும் சில நாட்களில் பறக்கப் போகும் உனக்கும் இதுதான்
நிலையா? நீ உணரமாட்டாயா? ஒரு தாய் தனது இரண்டு வயது பச்சிளம்
குழந்தையிடம் அந்த பிஞ்சு வாயில் "அப்பா" என்று மழலை மொழி பேசியதை கேட்டு உடனே வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூட...... அந்தப்பெண் தன் கணவனுக்கு செல்போனில் அழைப்பு கொடுக்க...... அங்கே அவன் ரிசீவரை காதில் வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறான், இங்கே எல்லோரும் அந்தக் குழந்தையிடம் இன்னொரு முறை " அப்பா -ன்னு சொல்லு" என்று நச்சரிக்க, அந்தத் தந்தையின் கண்கள்கண்ணீர் வடித்து கதறி அழுத சம்பவங்கள் எத்தனை? எத்தனை? தந்தைக்கு நேருகிறது. தாய் தந்தையின், சகோதர சகோதரிகளின், நண்பர்களின் நலம் விசாரிக்கும் போதும் எத்தனை இளைஞன் அழுகிறான். தன் மனைவிக்கு தொலைப்பேசியில் இட்ட முத்தம் பாசப் பசை கலந்திருந்தாலும் பணச்சாயம் இருப்பதால் அவள் கன்னத்தில் ஓட்ட மறுக்கிறது. இப்படி பாதிப் பாசமும், மீதி வேசமும் எத்தனை நாள் நீடிக்கப் போகிறதோ இந்த தேசத்தில்முஸ்லீம்களுக்கு.....
அன்புத்தோழனே! இந்த நிலைகள் தான் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் நீடிக்க வேண்டுமா? இதற்கு முடிவே கிடையாதா? நமது முன்னோர்கள் நமக்காக போரடாமல் விட்டுவிட்டார்களே, அதே தவறை நீயும்
மீண்டும் மீண்டும் செய்யப்போகிறாயா? இதனால் பாதிக்கப்போவது நம்
சந்ததிகளும் சேர்ந்தல்லவா.....
"நாம் மேலே சொன்ன இரண்டு இரத்த வரலாறுகளையும் படித்துவிட்டு,
கண்நீர்வடித்துவிட்டு களைந்து போகச் சொல்லும் கதைகளல்ல! நமது சமுதாயம் இன்னும் முன்னேற்றப் பாதையில் முழுமையாகச் சென்றடையவில்லை என்ற முன்னெச்சரிக்கையே!" இப்போது நீ போகப்போவது மூன்றாவது இரத்த வரலாறு
படைக்கத்தான்......
முதல் வரலாற்றில் முஸ்லீம்கள் இஸ்லாத்திற்காக உயிர் துறந்தார்கள்.
இரண்டாவது வரலாற்றில் தன் சொந்த பூமிக்காக உயிரையும், பிறகு உரிமைகளையும் இழந்தார்கள். ஆனால், நீ புறப்படும் இந்தப் போர்களத்தில் உனது சமுதயதிற்காக குருதியை அல்ல குரலைத்தான் கொடுக்கப்போகிறாய். இன்னும் தயக்கம் ஏன்?
இந்த நாட்டில் ஒரு ஓரத்தில் உன் சமுதாயத்தின் குரல் ஓலமிட்டுக்
கொண்டிருக்கும் போது அதன் ஒலியை நாமும் சேர்ந்து இந்த உலகக் காதுகளில் விளவைப்போம். நாம் இன்னும் உறைந்து போகவில்லை உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை உரைக்கச் சொல்லுவோம் இந்த உலகிற்கு.....
முஸ்லீம்கள் என்ற ஒரு இனம் இருந்ததா? என்று எதிர்கால இந்திய வரலாற்றில் பூதக்கண்ணாடியை வைத்து இன ஒதுக்கீடு செய்யும் போது, முஸ்லீம்களாகிய நாங்கள் இருந்தோம், வாழ்ந்தோம் என்று சொல்லுவதற்கு நமக்கு இட ஒதுக்கீடு அவசியம்! முஸ்லீம்களின் வாழ்கையை தக்க வைத்துக்கொள்ளும் இந்த வாழ்வாதரப் போராட்டம் எனும் போர்க்களம் நாளை இன்ஷா அல்லாஹ் இந்திய வரலாற்றின் நெற்றியிலே பொறிக்கப்பட வேண்டிய போராட்டம் ஆகலாம். அப்போது எந்த இளைஞனும்
" நமது பங்களிப்பு அதில் இல்லையே " என்ற குற்ற உணர்ச்சி தங்கள் மனதில்
எழாமலிருக்க இப்போதே தயாராகுங்கள்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 ஆம் நாளில் மாநில அளவில் 7%
சதவிகிதமாக உயர்த்தவும், மத்திய அளவில் 10%சதவிகிதமும் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக இணைவோம்.
தோழர்களே, இந்த என்னத்தை மனதில் நிலைப் படுத்துங்கள், இப்போதே உங்கள் பாதங்களைத் திடப்படுத்துங்கள், இந்த நாளை பிரச்சாரம் செய்யுங்கள் இந்த நாளுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், இன்ஷா அல்லாஹ் நெல்லையில் சந்திப்போம், சாதிப்போம்... அல்லாஹு அக்பர்!!! அல்லாஹு அக்பர்!!!
அன்புடன்
சம்சுதீன்
நெல்லை மாவட்ட மாணவர் அணி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜனவரி 28
போராட்டமல்ல போர்க்களமே!

No comments:
Post a Comment