தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கூட்டமைப்பு ஜித்தா மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் (22-12-2013) அன்று அல்லாஹ்வுடை ய மாபெரும் கிருபையினால் சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து கிளைகளின் நிலவரங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்ட விஷயம் வருகிற ஜனவரி 28 தேதி நடைபெற இருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு எவ்வாறு நமது பங்களிப்பை செயல்படுத்துவது. தேவைப்படும் பட்சத்தில் மண்டல, மாவட்டங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்திற்கு வசூல் செய்வதற்கு விண்ணப்பம் விநியோக்கிகப்பட்டு, அதை ஜனவரி 8 தேதிக்குள் வசூல் செய்து முடித்து தெரியப்படுத்தவும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஜனவரி 28 போராட்டத்திற்கு பிறகு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கா நகர் மஸ்ஜிதின் விரிவாக்கபணிக்கு பொருளாதார உதவி செய்வது பற்றி ஆலோசிக்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இறுதியில் கூட்டம் துவாவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு:
ஜித்தாவில் நடைபெற விருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் மக்காவில் நமது சகோதாரர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்றது என்பதை இங்கே பதிவு செய்கிறோம்.
No comments:
Post a Comment