கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2013

ஜனவரி 28 போராட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு பார்வை!

     தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பேரியக்கம் தற்போது உள்ள கல்வி வேலைவாய்ப்பில் 3.5% இட ஒதிக்கீட்டை  பெறுவதற்கு உழைப்பு மற்றும் பெரும் பொருளாதாரத்தை செலவு செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதனுடைய சிறு பயனை இப்போது நமது சமுதாயம் அனுபவித்து வருவதை இன்று நாம் அனுபவத்தில் கண்டு வருகிறோம். இருந்தாலும் இந்த இட ஒதிக்கீட்டு அளவு நமது சமுதாயத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான அளவில் தமிழகத்தில் இல்லை. அதானல் மாநிலத்தில் தற்போது இருக்கும் இட ஒதிக்கீட்டு அளவை 7 சதவிதமாக அதிகரிக்க வலியுறுத்தியும் மத்தியில் நமது சமுதாயத்திற்கு என்று  எந்த ஒரு இட ஒதிக்கீடு  



இல்லாததால் தனி இடஒதிக்கீடு வழங்க வலியுறுத்தியும், ஜனவரி  28 அன்று தமிழகத்தின் சென்னை , கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் சிறைநிரப்பு போராட்டத்தை  மாநில தலைமையகம் அறிவித்தது.

     மாநில நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் ஜமாத்தின் கிளை நிர்வாகங்களின் சார்பில் பெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கினர். எத்தனை விலை கொடுத்தாலும், சமுகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்தும் மிக்க கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதிக்கீட்டை பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்திலும், மேலும் குறிப்பாக இந்த அரசுக்கும் சமுகத்தில் உள்ள மக்களுக்கும் இட ஒதிக்கீடு பற்றி விழிப்புணர்வு கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் கிளை நிர்வாகங்கள் பொதுமக்களிடம் இருந்து பொருளாதரத்தை பெற்று செலவு செய்து வருகின்றனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

     அந்த வகையில் கடையநல்லூரில் உள்ள நான்கு கிளைகள் சார்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. மேலும்  கடையநல்லூர் முழுவதும் இதுவரை செய்யப்பட்ட போராட்ட விழிப்புணர்வு பணிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

    எனவே அன்பார்ந்த சமுகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட சகோதர்களே! உங்களால் இயன்ற பொருளாதாரத்தால் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கிளை நிர்வாகங்கள் சார்பில் கேட்டு கொள்கிறது.

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.(13:11)






































No comments: