கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 7, 2013

பேட்டை கிளை : காலாவதியான மருந்துகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

      07.12.2013 அன்று காலை கடையநல்லூர் பெரியாற்று பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பெரியாற்றுக்கு கிழக்கு பகுதியில்

ரோட்டின் ஓரத்தில்  சிதறி கிடந்த விலை உயர்ந்த மருந்துகளை கண்டனர். 

     இத்தகைய மருந்துக்கள் அனைத்தும் இரண்டு மாதத்துக்கு முன்பு காலவதியான மருந்துகள் என்பதை கண்டு ஆதிர்ச்சி அடைந்தனர். இது மாதிரியான  மருந்துகளின் வீரியம் தெரியாமல் சுற்று சூழலுக்கும், காடு வேலைகளுக்கு செல்பவர்கள், மாடு மேய்ப்பதற்க்கு செல்பவர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற கலவாதியான மருந்துகளை முறையாக அப்புறபடுத்தாமல், பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் வீசி எரிந்து சென்றுள்ளனர். இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளுக்கு யார் பொறுப்பு? 

        இப்படிப்பட்ட  செயல்களை ஈவு இறக்கமின்றி செய்துள்ள  மனிதகுல விரோதிகளை அரசாங்கம் இனம் கண்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும்மாறு கடையநல்லூர் நகராட்சி, மருத்துவ துறை, காவல்துறை ஆகியோர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக வேண்டுகோள் விடுக்கிறது.



No comments: