கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 27, 2014

டவுண் கிளை : கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டு நிகழ்ச்சி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் டவுண் கிளை மாணவரணி சார்பில் கல்வி வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டுதல் முகாம் 27.04.2014(இன்று) மாலை 



4.30 மணியளவில் மசூதுதைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் அய்யூப்கான் தலைமை தாங்கினார், மாநில பேச்சாளர் தாஹா அவர்கள் இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

   இம் முகாமில் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்? எந்த படிப்பை தேர்வு செய்தால் உள்நாடு & வெளிநாடுகளில் எத்தகைய வேலைவாய்ப்பு பெறலாம் என்பது குறித்த கேள்விகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் M. Y. உமர் பாரூக் அவர்கள் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு சிறந்த பதிலையும், கல்விக்கான சிறந்த வழிகாட்டுதலையும் எடுத்துச் சொன்னார்.

    நிறைவாக மாணவரணி செயலாளர் ஹாலித் நன்றி கூறினார். இதில் சுமார் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டை கடையநல்லூர் டவுன் கிளை சிறப்பாக செய்திருந்தனர்.






No comments: