கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 18, 2014

TNTJ பாராளுமன்ற தேர்தல் நிலைபாடு பற்றி ஊடகங்களின் பார்வையில்!

   நடைபெற இருக்கின்ற நாடளுமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இட ஒதிக்கீடிற்கு ஆணையத்தின் பரிந்துரைக்கு உத்தரவு பிறபித்த காரணத்திற்காக அதிமுகவை


ஆதரிக்கும் முடிவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து இருந்தது.


   தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிட கட்சிகள் தேர்தல் பிரச்சார ஆரம்ப கட்டத்தில் மதவாத பிஜேபி அணியையும், அதன் பிரதம வேட்பாளர் மோடியையும் கண்டு கொள்ளாமல் பிரச்சாரங்களை செய்து வந்தனர்.  பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பின்பு திமுக வின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் துவங்கி மோடிக்கு எதிராகவும், பிஜேபிக்கு எதிராகவும் விமர்சனங்களை துவங்கினர்.

   ஆனால் பிஜேபியின் தேர்தல் அறிக்கை வந்த பின்பு பல்வேறு பட்ட அரசியல் கட்சிகள் கேட்டு கொண்டும் பதில் கொடுக்காமல் அதிமுக வின் தலைமை மவுனம் காத்து வந்தது. அதிமுக வின் இந்த மவுனத்தால் இட ஒதிக்கீடு என்ற நன்மையை விட பிஜேபி என்ற சமுக விரோத கட்சி ஆட்சி அமைப்பதை தடுப்பதே மிக முக்கியமானது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் தன்னுடைய நிலைபட்டை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு அதிமுகவிற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கியது.

   வாபஸ் வாங்கி அடுத்த யாரை ஆதரிப்போம் என்ற நிலையை அறிவிக்கும் முன்பே, அடுத்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் பொதுகூட்டத்தில் இருந்த திமுக தலைவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை வரவேற்கிறோம் என்று மேடையில் முழங்கும் நிலைக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்றால் மிகையல்லா.

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இனி யாரை ஆதரிக்க போகிறார்கள் என்ற அரசியல் பரபரப்பு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இனி யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்க்காக திருச்சியில் கூடிய மாநில செயற்குழு முடிவை அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அன்று மாலை மாநில செயற்குழுவிற்கு பிறகு மாநில தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணியையும் 3 தொகுதிகளில்(மயிலாடுதுறை , தேனீ , கன்னியாகுமரி ) ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ்சையும் ஆதரிக்கும் நிலையை அறிவித்தார்.

  இத்தகைய நிலைப்பாட்டை அறிவித்த முதல் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் துவங்கியது. அடுத்த நாளே தேர்தல் பிரச்சாரத்தில் மவுனம் காத்த அதிமுக தலைமை பிஜேபியை விமர்சிக்க துவங்கியது .

   தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இஸ்லாமிய அமைப்பால் இத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதே என்று அரசியல் வல்லுனர்களையும், ஊடகத்துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு மாற்ற முடிவை தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் உள்ள தொலைகாட்சி , இணையதள மற்றும் பத்திரிக்கை ஊடகங்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிட்டு உள்ளதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,

தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான்.(13:11)
உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.(110:3) 












No comments: