கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 27, 2014

ரஹ்மானியபுரம் கிளை மார்க்க நிகழ்ச்சிகள்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 21/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு மர்யம் பள்ளி வளாகத்தில் வைத்து



"ஏன் எதிர்க்கிறீர்கள்" என்ற தலைப்பில் சகோதரர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் உரையாற்றிய நிகழ்ச்சி புரொஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

    22/06/2014 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு திருமறைக் குர்ஆன் விளக்க உரை வகுப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் ஹுசைன்னும், சகோதரர்  நயீம் முஹம்மது அவர்கள் "சஹாபாக்களின் தியாகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

    மேலும் 26/06/2014 அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவின் மேற்கு, நடுப்பகுதி என இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் முஜாஹித் மற்றும் காலித் அவர்கள்  " ரமலானை வரவேற்ப்போம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். இதற்க்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.





No comments: