கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆரம்ப கண் பரிசோதனை மையமும் இணைந்து நடத்திய
சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை மற்றும் அனைத்து வயதினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் 08.06.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணி வரை கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் தாஹா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அரவிந்த் கண் மருத்துவமணை கண் விழி திரை பரிசோதகர் வேணு கோபல் ரெட்டி அவர்கள் தலைமையில் அரவிந்த் கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 210 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 20 நபர்களுக்கு கண்பார்வை இழப்பு கண்டுபிடிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கண்மருத்துவ அதிகாரிகள், மற்றும் செவிலியர்களுக்கு TNTJ சார்பாக இஸ்லாம் பற்றிய விளக்க நூல்கள் வழங்கப்பட்டது.

















No comments:
Post a Comment