கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2014

அனைத்து கிளை ஆலோசனைக் கூட்டம்!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கடந்த 02.09.2014 செவ்வாய்கிழமை அன்று சகோதரர்  




ஒருவரின் இல்லதில் வைத்து மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அப்துல் நாசர், மாவட்ட செயலாளர் சகோ.முகம்மது பைசல். துணைத்தலைவர் சகோ.அச்சன்புதூர் சுலைமான். துணைச் செயலாளர் சகோ.ஜாகீர் உசைன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகளும் மற்றும் மாநில பேச்சாளர் தாஹா அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் கீழ் கண்ட விசயங்கள் ஆலோசனை செய்யபட்டது. 

1) புதியதாக மதினா நகர் பகுதியில் கிளையை ஏற்படுத்துவது,

2) வெளிநாட்டு சகோதர்களின் கோரிக்கையாகிய கடையநல்லுரை சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரத்தை விரிவுபடுத்த சகோ தாஹா மற்றும் சகோ இஸ்ஹாக் ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுத்துவது.

3) பேட்டை கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் 19-09-14 அன்று நடைபெற இருக்கின்ற மாபெரும் பொதுகூட்டம் சிறப்பாக நடத்துவது, 

4) பேட்டை கிளை சார்பாக நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாங்குவது சம்பந்தமாகவும்,

5) இறந்தவரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதங்கள் ஏற்படுவதால், இறந்தவர்களின் உடலை வைக்க கூடிய குளிர்சாதான பெட்டியின் தேவைகள் அதிகமாக இருப்பதால், 
எல்லா கிளைகளிலும் இறந்தவர்களின் உடலை வைக்ககூடிய குளிர்சாதன பெட்டி வாங்குவது.

மேலும் தாவா பணிகளை வீரியபடுத்துவது போன்ற விசயங்கள் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டது. இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments: