கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 30, 2014

கடையநல்லுரில் நடக்கும் முஹர்ரம் மாத மூடநம்பிக்கை!

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி 1560
முஹர்ரம் மாதத்தில் நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான


பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகிறது.
அதிலும் கடையநல்லுரில் மிக முக்கியமாக முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் மார்க்கம் என்ற பெயரில் கொழுக்கட்டை தயாரித்து, மார்க்க அறிஞ்சர்களை(?) அழைத்து புனிதம் என்று எண்ணி பாத்திகா மற்றும் மூன்று முறை யாசின் சூரா ஓதி அல்லது வீட்டில் யாருடைய உடம்பிலும் மருத்துவ துறையில் WART(வார்ட்) என்றும் தமிழில் உம்மி என்று அழைக்கபடும் தோல் நோய் இருந்தால் கொழுக்கட்டைகளை வீட்டில் உள்ள அந்த நோயாளியின் தலையில் கொட்டி வீட்டின் வாசல்களில் வைத்து சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழங்கி கோலாகலமாக கொண்டாடி காலங்கள் ஏகத்துவ கொள்கை வந்த பிறகு கடையநல்லூரில் மாறினாலும், தற்போதும் சில வீடுகளில் புனிதம் என்று எண்ணி மார்க்கத்தின் பெயரால் இந்த அனாச்சாரம் நடைபெற்று வருகிறது.

முஹர்ரம் மாத சிறப்பு ஓர் பார்வை!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ் வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை ஆகும்.(அபூஹுரைரா (ரலி)‘ நூல் : முஸ்லிம் (2157)

அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!'' என்றார்கள்.நூல் : முஸ்லிம் (2085)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்'' என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் (2083)

"அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்'' என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.நூல் : முஸ்லிம் (2089)

எனவே மூடநம்பிகைகளை விட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் காட்டி தந்த வழியில், முஹர்ரம் ஒன்பது மற்றும் பத்தாம் நாளில் நோன்பு நோற்று நற்பாக்கியம் பெறுவோமாக!

No comments: