தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15, 2014 வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப் பிரச்சாரம்
இம்முகாம்மிற்கு டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட துணைச் செயலாளர் ஜாஹீர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இதில் தென்காசி வருவாய் வட்டாச்சியர் திரு. சொர்ணராஜ் அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை இரத்தவங்கி மேலாளர் திருமதி டாக்டர் சுகந்த குமாரி தலைமையில் மருத்துவ குழுவினர் இரத்த தானத்தை பெற்றுக் கொண்டனர். முதல் குருதி கொடையை தங்கத்துரை என்ற கல்லூரி மாணவர் முன்வந்து வழங்கினார்.
இந்த இரத்ததான முகாமில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு கொண்டனர். இதில் 60 நபர்கள் இரத்ததானம் செய்தனர், 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இரத்தவகை கண்டறியப்பட்டு இவர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்வது என்று மாவட்ட இரத்த வங்கி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த நபர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ், தீவிரவாத எதிர்ப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் கடையநல்லூர் நகர நிர்வாகிகள் அப்பாஸ், அமீன், சிராஜ், பாதுஷா, ஹாஜா, நிரஞ்சர்ஒலி, முஜாஹீத், அபூபக்கர்,மைதீன்,நியாஸ் செய்தி ஆகியோர் இம் முகாமில் கலந்து கொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை மருத்துவரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவ மனை சார்பில் மேலப்பாளையம், பர்கிட்மாநகர், வி.கே.புரம்,தென்காசி ஆகிய இடங்களில் 400க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.
செய்தி சேகரிப்பு : சகோ. குறிச்சி சுலைமான்
செய்தி சேகரிப்பு : சகோ. குறிச்சி சுலைமான்











No comments:
Post a Comment