கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2015

ரஹ்மானியபுரம் கிளை நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரசாரங்கள்!
    ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 01.04.2015 ரஹ்மானியாபுரம் 3வது தெரு கிழக்கு பகுதியில் வைத்து தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் 
சகோ. முஜாஹித் "இணைவைப்புக்கு நரகமே கூலி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
    02.04.2015 அன்று 4வது தெருவில் வைத்து தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஜாஹித் "தர்கா வழிபாடு ஓர் பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


பெண்கள் பயான்!
04.04.2015 அன்று மாலை ரஹ்மானியாபுரம் 5வது தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சபீனா அவர்கள் "இறுதிவரை ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.



நோயாளிகளை சந்தித்தல்!
7-04-15 காலை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான ஜூஸ் மற்றும் பழவகைகள் வழங்கினர்.
மேலும் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டது. 
இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments: