கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 31, 2015

பேட்டை கிளை கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி!

     பேட்டை கிளை சார்பாக கோடைகால விடுமுறையை மாணவ, மாணவிகள் பயனுள்ள வழியில் கழித்திட முதல் முறையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ள பாடதிட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்பு இந்த வருடம் கடந்த 16.5.2015 சனிக்கிழமை முதல் துவங்கியது.
      இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கு தனி தனியே காலை 9 மணி முதல் 1.00 மணிவரையில் புளியமுக்குதெரு மேற்கில் உள்ள பேட்டை கிளை மர்கஸில் நடைபெற்றது இதில் 350 மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய கொள்கை விளக்கம், நடைமுறை ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் தீய பண்புகள் ஆகியவை போதிக்கப் பட்டது.
      இதன் நிறைவு நிகழ்ச்சிக்கு பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் பைசல் கிளை நிர்வாகிகள் நிரஞ்சன்ஒலி அப்துல்காதர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலபேச்சாளர் தாஹா கோடைகால பயிற்சி ஏன் எதற்கு என்ற தலைப்பில் பேசினார் மாணவ மாணவிகளுக்கு காவல்துறை ஆய்வாளர் திரு சாம்சன் அவர்கள் பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.
      இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், அமீன் ,பாதுஷா ,அப்துல்லாஹ்குட்டி,மற்றும் அதிகமான பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.










No comments: