கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2015

டவுண் கிளை நிகழ்ச்சிகள்!

 துண்டுப் பிரசுரம் விநியோகம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக (22-04-15) அன்று காலை சரியாக 08:00 மணி முதல் 9:15 வரை, பழைய பேருந்து 

நிலையததில் (ஆஸ்பத்திரி ஸ்டாப்) வைத்து "விண்ணிலிருந்து வந்த ஓளி (திருமறையின் அற்புதங்கள் பற்றியது)" என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு மாற்று மத அன்பர்களிடம் விநியோகம் செய்தனர். இதனை பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களும் பெரியவர்களும் ஆர்முடன் வாங்கி படித்தனர்.

 பெண்கள் பயான்
25-04-15 அன்று மாலை டவுண் கிளை மர்க்கஸில் வைத்து நடைபெற்ற பெண்கள் பயானில் சகோ.சதாம் அவர்கள் "ஈமானிய நம்பிக்கை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

வாழ்வாதர உதவி!
  25-04-15 அன்று கிளை சார்பாக மஹ்முதா நகரில் உள்ள ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 3,000- ம் வழங்கப்பட்டது.

தெருமுனைப் பிரச்சாரம்:

25-04-2015) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய தெரு மற்றும் அல்லிமூப்பன் தெருவில். வைத்து மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் அல்லிமூப்பன் தெருவில் சகோ. புளியங்குடி அலாவுதீன் அவர்கள் "தர்ஹா வழிபாடு ஈமானுக்கு பெரும்கேடு" என்ற தலைப்பிலும், பெரியதெரு கந்தூரி நடைபெறும் தருணத்தில் சகோ. ஹாலித் உசேன் அவர்கள் "இனைவைப்பு ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.




No comments: