கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 26, 2015

தாலுக்கா அலுவலகம் - மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்.
கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க கோரி மாபெரும் மகள் திரள் ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகில் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார். மாநில மேலாண்மைகுழு
உறுப்பினர் அப்துன் நாசர், மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார் அதில், கடையநல்லூரில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டவேண்டும் ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் நடமாட்டம் இல்லாத மிருகங்கள் வசிக்கும் சமூகவன அடர்ந்த காட்டுபகுதிக்கு (38 கரட்டு புறம்போக்கு) தாலுகா அலுவலகத்தை கொண்டு செல்வது பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும், அரசு கருவூலத்திற்கும் பாதுகாப்பு இல்லை ஆகவே இவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய தலைவர்கள், நாட்டாண்மைகள், ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் இப்போரட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான ‘’டாஸ்மார்க் நகருக்குள்ளே! தாலுகா ஆபீஸ் காட்டிற்குள்ளா!! அமைத்திடு அமைத்திடு! நகரின் மையப் பகுதியில் தாலுகா ஆபீஸ் அமைத்திடு!! என்பன போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
கடையநல்லூரில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்ட வேண்டும், ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் நடமாட்டம் இல்லாத மிருகங்கள் வசிக்கும் சமூகவன அடர்ந்த காட்டுபகுதிக்கு 38 கரட்டு புறம்போக்கு) தாலுகா அலுவலகத்தை கொண்டு செல்வது பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும், அரசு கருவூலத்திற்கும் பாதுகாப்பு இல்லை ஆகவே இவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.





இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள், தொண்டரணி, மாணவரிணியினர் சிறப்பாக செய்து இருந்தனர். இறுதியில் டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் நன்றி கூறினார்.

No comments: