தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் சார்பில் 07.06.2015 அன்று மாலை 6.30 மணியளவில் காயிதேமில்லத் திடலில்
வைத்து, ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் இ.முகம்மது மற்றும் நகர நிர்வாகிகள் அய்யூப்கான் அமீன், அப்துல்லா, பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் முகம்மது யூசுப் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதற்கு முன்னதாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நகரில் 1121 மதிப்பெண் பெற்ற ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி மாணவி M.A.சசினா பர்வீன் அவர்களுக்கும் அதுபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண் பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த சண்முக சுந்தரி என்ற மாணவிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை அனைத்து கிளை செயலாளர்கள் ஹாஜா மைதீன், நிரஞ்சர் ஒலி, முஜாஹித், சிராஜ் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர் . இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா துணைச்செயலாளர், ஜாகிர் உசைன், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் மதினாநகர் கிளை தலைவர் பாதுஷா நன்றியுரையாற்றினார்.

No comments:
Post a Comment