1. கடந்த 01.06.2015 திங்கள்கிழமை அன்று நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து, அதற்குள்ளேயே வைத்து அப்பாவி முஸ்லிம்கள் மீது அநியாயத் தாக்குதல் நடத்திய உதவி ஆணையாளர் மாதவன் நாயர் மற்றும்
இச்சம்பவம் நடைபெற சூத்திரதாரியாக செயல்பட்டு பொய் புகார் அளித்த உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மீதும் வழக்குப் பதிவு செய்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசை இப் பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
இச்சம்பவம் நடைபெற சூத்திரதாரியாக செயல்பட்டு பொய் புகார் அளித்த உதவி ஆய்வாளர் சேக் அப்துல் காதர் மீதும் வழக்குப் பதிவு செய்து பணிநீக்கம் செய்ய தமிழக அரசை இப் பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
2. கடையநல்லூரை தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 02.06.2015 முதல் கடையநல்லூரை தனி தாலூகாவாக தொடக்கி வைத்த தமிழக அரசுக்கு இப் பொதுக்கூட்டம் வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
3. புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது வேளாண்மைதுறை (அக்ரோ) அலுவலகத்திற்க்கு பின்னால் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கட்டிடத்தில் நிரந்தரமாக தாலுகா அலுவலகம் ஏதாவது ஒன்றில் நிர்ந்தரமான கட்டிடம் கட்ட இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் வருவாய் கிராம மக்களை திரட்டி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இப் பொதுக்கூட்டம் மூலம் எச்சரிக்கை செய்கின்றோம்.
4. கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய் பதிப்பற்காக தெருக்களில் தோண்டப்பட்ட குழிகளை முறைப்படி மூடாமலும் அந்த பகுதிக்கு புதிதாக ரோடுகள் போடப்படாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக கால தாமதம் செய்து வரும் நகராட்சி நிர்வாகத்தை இப் பொதுக்கூட்டம் வன்மையாக கன்டிக்கிறது.
செய்தி படம் :-குறிச்சிசுலைமான்
செய்தி படம் :-குறிச்சிசுலைமான்




No comments:
Post a Comment