கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

மதினா நகர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்!

தெருமுனைப் பிரச்சாரம் :
மதினா நகர் கிளை சார்பாக (03-06-15) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு மூன்று இடங்களில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில்

பேச்சாளர் பயிற்சி மாணவர்கள், சகோ. யாஸர் "இணைவைப்பு ஒரு பெரும்பாவம்"என்ற தலைப்பிலும், சகோ. தவ்பீக் "மனிதனின் இலக்கு" என்ற தலைப்பிலும் மற்றும் சகோ. தாரிக் "இறைவனுக்கான இலக்கணம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

தெருமுனைப் பிரச்சாரம் :
மதினா நகர் கிளை சார்பாக 04-06-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு மதினா நகர் காதர் முகைதீன் இரண்டாவது தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் பயான்!
மதினாநகர் கிளை சார்பாக 04/06/2015 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.சபீனா (இறைவனிடத்தில் மட்டும் கையேந்துவோம்)என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.




No comments: