கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2015

கடையநல்லுரில் புதியதாக துவங்கப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு!

 02.06.2015 இன்று தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக புதிதாக இன்று திறக்கப்பட்ட தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மு. கருணாகரன் அவர்களை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
புதிதாக தொடங்க இருக்கும் தற்காலிக வட்டாச்சியர் அலுவலகத்தில் அரசு 

அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான,
• பொது கழிப்பிட வசதி,
• அலுவலகம் முன்பு நிழல்கூரை அமைத்தல்,
• அனைத்து பேரூந்துகளும் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நின்று செல்வதற்கான ஏற்பாடுகள்,
• குடிநீர் வசதி
ஆகியவைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படியும், புதிதாக அமையும் நிரந்தர வட்டாச்சியர் அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல
• நகரின் மையப் பகுதியான போக்குவரத்துக்கு வசதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்திலோ,
• அட்டக்குளம் மேல் புறத்தில் உள்ள அரசு புறம்போக்கு குட்டை பால்ஊரணி மேல்பகுதிலோ,
இந்த அலுவலக கட்டிடம் கட்ட இந்த இரு இடங்களில் ஒன்றை தேர்வு செய்து,அரசுக்கு அனுப்புமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஆகிய விசயங்கள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகி சகோ ஜாஹிர் முன்னிலையில் பேட்டை கிளை தலைவர் அப்பாஸ், டவுண் கிளை செயலாளர் ஹாஜா,மதினா நகர் கிளை தலைவர் பாதுஷா,டவுண் கிளை பொருளாளர் ஹைதர் அவர்கள் கலந்து கொண்டுனர்.

No comments: