கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 4, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்!

உ.பி.யில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் முஸ்லிம் பெரியவர் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அக்:4-கடையநல்லூரில் தமிழ்நாடு 


தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் மணிக்கூண்டு அருகே காலை 11மணிக்கு உ.பி.யில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் முஸ்லிம் பெரியவர் அடித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார் மாநில செயலாளர்கள் யூசுப்அலி ,செய்யது அலி மாவட்ட மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இறுதியில் மாநில தலைவர் பக்கீர்முகம்மது அல்தாபி கண்டன உரை நிகழ்தினர்.
   அதில் அவர்  உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் கடந்த 28-ம் தேதி இரவு அவரது வீட்டில்  புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கி அக்லாக் உடலை சிதைத்து  படுகொலை செய்தனர் அவரது தாய் அஸ்கரி (70), மனைவி இக்ராம் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள் ஷாஹிஸ்தா(16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் தானிஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் 
  இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சியை வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக  அறிவிப்பு செய்து பெரும் கூட்டத்தை திரட்டி  அக்லாக்கை படுகொலை செய்து விட்டு மேலும் அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்னர் இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். 
  மேலும் அவர்கள் மாட்டுக் கறியே சாப்பிட்டிருந்தால்தான் என்ன.. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? அதை விடக் கொடுமை அவர்களது வீட்டில் வைத்திருந்த கறியை போலீஸார் எடுத்துச் சென்று தடயவியல் சோதனைக்கு அனுப்பியதுதான். போலீஸாரின் இந்த செயல் அந்தக் கிராமத்தினரின் செயலுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை என்றார்.  இப்போரட்டத்திற்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் கண்டனத்தை பதிந்தனர் இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பாக செய்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா நன்றி கூறினார்.. 











-செய்தி ,படம் குறிச்சிசுலைமான்

No comments: