கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 5, 2015

வெள்ள நிவாரண மீட்பு பணியில் பங்குகொள்ள சென்னையை நோக்கி பயணம்!

05-12-15 இன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டத்தில் வெள்ளநிவரண நிதி வசூலை கடந்த இரண்டு நாட்கள் 

நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை உட்பட 25 கிளைகளில் மக்களிடம் பணமாகவும், பொருளாகவும், பெண்களிடம் தங்க வளையல், கொலுசு, துணிமணிகள், பழைய சாமான்களாகவும் வாரி வழங்கினார்கள்.
ரூபாய் பதிமூன்று இலட்சத்தையும்(13,000,00) மேலும் இரண்டு இலட்சம்(2,000,00) மதிப்புள்ள நிவரண பொருட்களுடன் , மீட்பு பணிக்கு கடையநல்லூரிலிருந்து இரண்டு பஸ்களில் நூறு தொண்டர்களுடன் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இவை அனைத்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை வழிகாட்டுதலின் படி சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையாக வினியோகம் செய்யப்படும்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பைசல், தாஹா, அப்பாஸ், அஜீஸ், ஜாகிர், சாகிப் அனைத்து கிளை நிர்வாகிகள் அய்யூப்கான், அமீன், குறிச்சிசுலைமான், நிரஞ்சன் ஒலி, பாதுஷா, ஆகியோர் கலந்து கொன்டனர்.





No comments: