கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 29, 2010

கடையநல்லூர் சீனாப் பள்ளியில் வைத்து நடைபெற்று வரும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சீனாப் பள்ளியில் ரமலான் மாதம் முழுவது இரவுத்தொழுகைகுப் பிறகு குர்ஆன் விளக்க வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.முகம்மது கோரி அவர்களும் , சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதில் நாள்தோறும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து பயணடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

Aug 27, 2010

மஸ்ஜித் முபாரக் -ல் நடைபெறும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மஸ்ஜித் முபாரக் ல் ரமலான் மாதம் முழுவது இரவுத்தொழுகைகுப் பிறகு குர்ஆன் விளக்க வகுப்பும், தினந்தோறும் அஸர் தொழுகைபிறகு ஹதீஸ் விளக்க வகுப்பும் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் வகுப்புகளை நடத்தி வருகின்றார். இதில் நாள்தோறும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து பயணடைந்து வருகின்றனர். மேலும் அங்கு இப்தார் நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயணடைந்து வருகின்றனர்அல்ஹம்துலில்லாஹ்.
அஸர் தொழுகைக்குப்பிறகு நடைபெற்று வருக் ஹதீஸ் வகுப்பு
...

Aug 24, 2010

10 நாட்களில் உரிய நடவடிக்கை அரசு தரப்பில் உறுதிமொழி: சென்னை போராட்டம் தற்காலிக வாபஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் அறிவித்தது.
ஆர்பாட்ட அறிவிப்தை அறிந்த அரசு துறை  நமது கோரிக்கைகளுக்கு 10 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக நம்மை அழைத்து பேசியதை தொடர்ந்து சென்னையில் நாளை (24-8-2010) நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
-தலைமைகழகம்
நன்றி : http://www.tntj.net/

Aug 22, 2010

TNTJ அரசியலில் நுழையுமா ??

தவ்ஹீத் க்குள் பிரிவினைகள் ஏன் ??

கண்டன ஆர்ப்பாட்டம்-- 


தக்கல் முறையில் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை


பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொருள் பெற விரும்பாதவர்கள் குடும்ப அட்டையை தக்கல் முறையில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மஞ்சள் நிறமுள்ள "என்' கார்டு என்னும் இந்த அட்டையை இருப்பிட முகவரிக்கு சான்றாக வைத்துக் கொள்ளலாம். மனுதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். அதனடிப்படையில் கார்டு வழங்கப்படும்.

Aug 20, 2010

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே!


''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!  உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.  ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்...

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

Aug 18, 2010

இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


தொகுப்பு : மௌலவி கே. எம். அப்துந் நாஸிர்   செல் : 9865584000


கடமையான தொழுகைக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்தது நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவில் தொழும் தொழுகையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி நூல்கள் : முஸ்லிம் (1982?), 

நோன்பின் சட்டங்கள்


بسم الله الرحمن الرحيم

தொகுப்பு : மௌலவி கே. எம். அப்துந் நாஸிர்   செல் : 9865584000

பிறையை கண்களால் பார்த்துதான் ரமலானை ஆரம்பிக்க வேண்டும்

'அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: புகாரி 1909
''பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலிநூல்: புகாரி 1906

Aug 12, 2010

பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

ல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பாக 11. 08. 2010 (புதன்) மாலை 5 மணியி ருந்து மக்ரிப் தொழுகை வரை பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றௌ முடிவடைந்த்து.

கடையநல்லூர் TNTJ சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்லாஹ் தன்அருளைப் பொழியும் மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் மார்க்கத்தை அதிகம் அதிகம் அறிந்து அதன் மூலம் நடந்து அந்த வல்ல அல்லாஹ்விடத்தில் அதிகம் அதிகம் கூலியை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடையநல்லூர் கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவது அங்குள்ள அனைத்து தவ்ஹீத் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபரம் கீழே.........

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நகர கிளையின் பொதுக்குழு


ல்லாஹ்வின் கிருபையால், 10. 08. 2010 (திங்கள்) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கடையநல்லூர் நகர கிளையின் பொதுக்குழு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் டிஎம். ஜபருல்லாஹ்குறிச்சி சுலைமான்அச்சன்புதூர் சுலைமான்சங்கை பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Aug 11, 2010

கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்


விஜய் டிவியில் பரபரப்பு பேட்டி களத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்


கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.


அதாவது கடந்த 9.08.2010அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.


ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னைதுன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

PERSONALITY DEVELOPMENT - Lecture by P.Zainul Aabitheen


Aug 10, 2010

ஜித்தாஹ் மண்டல கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலொசனைக் கூட்டம்

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த வெள்ளி அன்று (06/08/2010) மக்ரீப் தொழுகைக்பிறகு  ஜித்தாஹ் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ன் ஆலோசனை கூட்டம் செனய்யா வில் நடைபெற்றது.அதில் ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இஃப்தார் நிகழ்ச்சி பற்றியும் ஃபித்ரா பற்றி விவாதிக்கப்பட்டது.

Aug 9, 2010

நோன்பின் சட்டங்கள்

ஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்.

Aug 7, 2010

நோன்புப் பெருநாள் தர்மம்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

கடையநல்லூர் டிஎன்டிஜே நகர நிர்வாகிகள் துனை முதல்வருடன் சந்திப்பு

டையநல்லூர் நகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைக்கவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் துணை முதல்வரை சந்தித்து நேரடியாக வயுறுத்தல்.

Aug 5, 2010

நமதூரில் இப்தார் நிகழ்ச்சி சம்பந்தமாக ஒரு அறிவிப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்…….
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைப்பிக்க செயகிறது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பலமடங்காக கொடுக்கிறான் அல்லாஹ் தாரளமானவன்,அறிந்தவன் (அல்குர்ஆன் 2-261)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்

ரமலான் நம்மை நோக்கி வந்து கொணடிருக்கிறது இது புனித மிக்க மாதம் திருக்குர் ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் இன்னும் இது போன்ற சிறப்புகள் இந்த மாதத்திற்க்கு உண்டு.அல்லாஹ் இந்த மாதத்தை முழுமையாக அடையக்கூடிய மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக.

Aug 3, 2010

ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் , கடந்த 30.07.2010 அன்று வெள்ளிக் கிழமை மக்ரீப் தொழுகைக்குப் பிறகு A.S.முஹைதீன அவர்களின் தலைமையில் தவ்ஹீத் செயலகத்தில் நடைபெற்றது.

Aug 2, 2010

ரமலானை வரவேற்போம்...

ன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால் தான். அல்லாஹ் தன் திருமறையில்.

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். ஸுரா அல்பகரா 2:185
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ரமளானில் நோன்பு நோற்றல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.           அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல் : புஹாரி 8

திருமணத்தின் போது பெற்ற ரூ140,000/- திருப்பி ஒப்படைக்கப்பட்டது

கலந்தர் மஸ்தான் தெருவைச் சார்ந்த பாவோடி அப்துல் காதர் அவர்களுடைய சகோதரர்  செய்யது மசூது அவருக்கும் இக்பால் வடக்குத் தெரு நயினார் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்  சேகுதுமான் என்பவருடயை மகளுக்கும் 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாவோடி செய்யது மசூது ஆகிய  மணமகன் திருமணத்தின் போது பெண்ணுடைய தகப்பனாரிடமிருந்து 140,000/- ரூபாயை பெற்றிருந்தார்.

Aug 1, 2010

டெங்கு கொசு நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு


கடையநல்லூர் மக்கா நகரைச் சார்ந்த நிஸா என்ற சகோதரிக்கு டெங்கு கொசுவால் காய்ச்சல் ஏற்பட்டு வெள்ளை அணுக்கள் முற்றிலும் குறைந்து விட்டது. இதற்கு அப்பெண்மணிக்கு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் ùச்யயப்பட்டு வருகிறது. இது அப்பகுதியில் சாக்கடை , பன்றி போன்றவைகளால் ஏற்பட்டுள்ள சுகாதாரக் கேடுகளால் இந்நோய் உருவாகியுள்ளது. போர்க்கால அடிப்படையில் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையாளர்  அவர்களிடம் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது.

இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு : மாதம் 300 யூனிட்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம்


வீடுகளில் இரண்டு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம், யூனிட்டிற்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.